மேடம்:அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்
மேட ராசிக்காரர்களே 5ம் இடத்தில் தொடர்ந்து சஞ்சரித்து வரும் ராசிநாதன் செவ்வாயின் நிலை உங்களின் தீவிரத்தை அதிகரிக்க செய்யும். இடமாற்றத்துக்கு வாய்ப்புண்டு. எதிர்பாராத செலவு ஏற்படலாம். தந்தையின் உடல் நலம் பாதி ப்படையலாம். அலைச்சலைத் தரும். குடும்ப ஸ்தானத்தில் உள்ள கேது வீண் குழப்பங்களை ஏற்படுத்தலாம். திருமணம் தடங்கலாகலாம். மேலும் வைத்திய செலவுக்கு உள்ளாகலாம். மனதுக்கு ஆறுதலான மங்கலகரமான செய்தி கிடைக்கும்.
இடபம்
கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்
இடப ராசிகாரர்களே 4ம் இடத்தில் தொடர்ந்து சஞ்சரித்து வரும் செவ்வாயினால் சில சிரமங்களுக்கு உள்ளாக வேண்டி வரும். சொத்துக்களால் இலாபம் சொத்துக்களால் இலாபம் ஏற்படும். உடல் நலம் மேம்படும் தொழில்துறைகளால் இலா பம் ஏற்படும் அரச உத்தியோகம் கிடைக்கலாம். சுபகாரியங் கள் செலவுகளை ஏற்படுத்தலாம். ஒரு வித சோம்பல் தன்மை நிலவும். தேவைக்கு பணம் வந்து சேரும். மேலும் திரும ணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். பெண்வழி ஆறுதலை தரும்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்
மிதுன ராசிக்காரர்களே 3ம் இடத்தில் தொடர்ந்து சஞ்சரித்து வருவதால் பணம் தராமல் ஏமாற்றியவர்கள் அதனை தரலாம் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியளிக்கும். வேண்டி யளவு பணம் வந்து சேரும், புதிய சொத்துக்களும் சேரும். பெருமளவு செலவும் ஏற்படலாம். பிள்ளைகளால் யோசனைக ளைத் தரும். மேலும் வழக்குகளில் பரீட்சைகளில் வெற்றி யைத் தரும். வைத்திய செலவுக்கு வழிவகுக்கும்.
கடகம்
புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்
கடக ராசிக்காரர்களே 2ம் இடத்தில் தொடர்ந்து சஞ்சரித்து வரும் செவ்வாயினால் பொருட்களை இழக்க நேரிடலாம். மேலும் பயணங்களின் போது மிகவும் கவனமாக அவதானமாக நடந்து கொள்ளுங்கள். பதவி மாறுவதற்கு இடம் உண்டு. தேவைக்கு பணம் வந்து சேரும். வெவ்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். பிள்ளைகளால் மனதில் யோசனைகள் தோன்றும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வெற்றியான செய்தி வந்து சேரும்.
சிங்கம்
மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்
சிங்க ராசிக்காரர்களே 1ம் இடத்தில் தொடர்ந்து சஞ்சரித்து வரும் செவ்வாயினால் உங்கள் செயல் வேகம் கூடும். அரச வழி உத்தியோகத்தர்கள் எல்லா விதத்திலும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் நலத்தை ஓரளவு பாதிக்கும். வேண்டிய பொருளையும் பொன்னையும் தரும். மேலும் பங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். மனதில் ஒருவித சஞ்சலத்தை ஏற்படுத்தும்.
கன்னி
உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்
கன்னி ராசிக்காரர்களே 12ம் இடத்தில் தொடர்ந்து சஞ்சரித்து வரும் செவ்வாயினால் கட்டுக்கடங்காத செலவு இருக்கும். திருமணத்தில் குழப்பம் ஏற்படலாம் உடல் நலம் பாதிப்படை யலாம். பல சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். பெருமளவு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். குடும்பத்திலும் சச்சரவுகள் தோன்றும். மேலும் ஓரளவு உங்களது தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வழிவகைகள் பிறக்கும். சில தடைகள் உங்களை விட்டு நிங்கும்.
துலாம்
சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்
துலா ராசிக்காரர்களே 11ம் இடத்தில் தொடர்ந்து சஞ்சரித்து வரும் செவ்வாயினால் நீங்கள் எதிர்பாராத வண்ணம் பணம் வந்து சேரலாம். புதிய சொத்துக்கள் சேரலாம். பண இலாபம் ஏற்படும், எதிரிகளின் தொந்தரவு குறையும், உடல் நலம் மேம்படும். திருமணம் கைகூடி வரும். ஒரு வித சோம்பல் தன்மை உடலில் இருக்கும். அலைச்சல் மிகுதியாக இருக்கும். மேலும் வீண் வார்த்தைகளால் சச்சரவு தோன்றும். குடும்ப த்தில் சஞ்சலம் தோன்றும்.
விருச்சிகம்
விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை
விருச்சிக ராசிக்காரர்களே 10ம் இடத்தில் தொடர்ந்து சஞ்சரித்து வரும் செவ்வாயினால் தொழில் ரீதியிலான உடல் நலமும் பாதிப்படையலாம். திருமண பேச்சுக்கள் குழம்பலாம். மேலும் பலவித கவலைகள் இருக்கும். வீண் அலைச்சல் இருக்கும். குடும்பத்தால் மன நிம்மதி இருக்கும்.
தனுசு
மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்
தனுசு ராசிக்காரர்களே 9ம் இடத்தில் தொடர்ந்து சஞ்சரித்து வரும் செவ்வாயினால் எதிர்பாராத செலவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். பெண்களால் கரைச்சல் தோன்றும். குழந்தைப் பாக்கியம் ஏற்படும், போதியளவு பண வரவு உண்டு. பொன் பொருள் சேரலாம். மேலும் பணம் அதிர்ஷ்டத்தை தரலாம். தூரதேசத்து பயணத்தை ஏற்படுத்தலாம். அரச உத்தியோகத்தர்கள் முன்னெச்சரிக்கை யுடன் நடந்து கொள்ளவும்.
மகரம்
உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்
மகர ராசிக்காரர்களே 8ம் இடத்தில் தொடர்ந்து சஞ்சரித்து வரும் செவ்வாயினால் போக்குவரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். புதிய பதவிகள் கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும், போதியளவு பண வரவு உண்டு, எதிரிகள் பணிந்து விடுவர், உடல் ஆரோக்கியம் மேம்படும். திடீர் யோகத்தை தரலாம். பிள்ளைகள் பற்றிய யோசனை மனதில் இருக்கும். மேலும் வீண் பெயரைக் கேட்க வைக்கலாம். பெண் வழி சுகத்தை ஏற்படுத்தலாம். கோபத்தை ஏற்படுத்தலாம்.
கும்பம்
அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்
கும்ப ராசிக்காரர்களே 7ம் இடத்தில் தொடர்ந்து சஞ்சரித்து வரும் செவ்வாயினால் குடும்பத்தில் தகராறு ஏற்படலாம். தேவையில்லாத அலைச்சல்களை ஏற்படுத்தலாம், பெருமளவு பண விரயத்தையும் தரலாம். உங்கள் பதவிகளை மாற்றலாம். உடல் நலத்தை பாதிக்கலாம், தேவையில்லாத அறிமுகம் ஏற்படலாம், உடல் நலமும் பாதிப்படையலாம். மேலும் எதிரிக ளிடையே கரைச்சல் இருக்கும். உங்கள் பெயர் பாதிக்கப்படலாம். உறவினர்களிடையே கலக்கத்தையே ஏற்படுத்தலாம்.
மீனம்
பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி
மீன ராசிக்காரர்களே 6ம் இடத்தில் தொடர்ந்து சஞ்சரித்து வரும் செவ்வாயினால் உலோக வியாபாரம் காரணமாக நல்ல பண வரவு உண்டு. தேவையில்லாத அலைச்சல்களை ஏற்படுத்தலாம், சமூகத்துக்கு மதிப்பு குறையும். பெருமளவு பணத்தை தரலாம், எதிரிகளின் தொந்தரவும் குறையலாம். திடீர் அதிர்ஷ்டத்துக்கு இடம் உண்டு. மேலும் மனதில் ஒருவித சஞ்சலம் இருக்கும். எதிர்பார்க்கும் முடிவுகள் நன்றாக அமையாது. உடல் நலம் பாதிப்படையலாம்.
18.03.2012 முதல் 24.03.2012 வரை
பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா
Post a Comment