"திகில் கதைக்களத்தோடு, மூடநம்பிக்கையால் ஏற்படும் விளைவுகளையும், குடும்ப
உறவுகளுக்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளையும் நாகரிகமாகச் சொல்லியிருக்கிறேன்' என்கிறார் படத்தின் இயக்குநரான பாலு மலர்வண்ணன்.
இவர் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்ததில்லை. பத்திரிகையாளராகவும், மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த அனுபவங்களைக் கொண்டே தன் முதல் படத்தை இயக்குகிறார் பாலு மலர்வண்ணன்.
படத்தில் திலீப்குமார் - ஜானவியின் காதல் எதார்த்தமாக இருக்குமாம். ஹீரோ திலீப்குமாரின் அண்ணன் தேவ்குமார் படத்தைத் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் வி.தஷி பல்வேறு படங்களுக்கு இசையமைத்தும்,இரண்டாயிரம் படங்களுக்கு மேல் இசைக்குறிப்புகள் எழுதியும் உள்ளார். ஒளிப்பதிவாளர் ஸ்ரீரஞ்சன்ராவ் கே.பாலசந்தர் தயாரித்த படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார்.
"சாமியாடி கேரக்டரில் வரும் எம்.எஸ். பாஸ்கரின் காமெடிக்கும், வெள்ளந்தித் தாயாக வரும் வடிவுக்கரசியின் நடிப்பு சென்டிமென்டுக்கும் கியாரண்டி' என்கிறார் பாலு மலர்வண்ணன்.
எழுத்தாளர் கெüதம நீலாம்பரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்
கிறார்.
Post a Comment