இன்று காலையில் இருந்து அணுமின் நிலையத்திற்கு பணிக்கு செல்லும் நபர்கள் பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். 3 ஷிப்டுகளுக்கு மொத்தம் 900 பேர் இன்று பணியில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்ய விஞ்ஞானிகள் பலரும் இன்று நிம்மதியாக பணிக்கு சென்றனர். இவர்கள் நீண்ட காலமாக வெளிநாட்டில் இருந்து வந்து பணியில் ஈடுபடாமல் இருந்து வந்தனர். இதனால் நாடு திரும்பி விடலாம் என்ற நிலையில் தமிழக அரசின் முடிவு பெரும் மகிழ்ச்சியை தந்திருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில் போராட்டக்காரர்கள் அணுமின்நிலையத்திற்கு அருகில் அமைத்திருந்த ஓலை கூடாரத்தை போலீசார் அகற்றினர். போராட்டக்காரர்கள் பிரச்னையை கவனத்தில் கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அøம்சரவை தீர்மானம் நிறைவேற்றபட்பட்ட நாள் முதல் இந்த கூடாரத்தில் தான் போராட்டக்õரர்கள் கூடி இருந்து அணு உலைக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அணுஉலையை போராட்டக்காரர்கள் யாரும்நெருங்க முடியாத அளவிற்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து அதிவேக சிறப்பு படை ஆர்.ஏ.எப்., மத்திய போலீசார் இன்று கூடங்குளம் அணுமின்நிலையம் பாதுகாப்புபணிக்கு வந்தனர். இந்த படையினர் அணுமின் நிலையம் அருகே குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசுக்கு ரஷ்ய விஞ்ஞானிகள் பாராட்டு : ""இந்தநாள் எங்களுக்கு மிகச்சிறப்பு வாய்ந்தநாள்'', என, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பணிக்குச் சென்ற ரஷ்ய விஞ்ஞானி மமினெவ் அலெக்சாண்டர் தெரிவித்தார். கூடங்குளம் அணுமின்நிலைய பணிக்காக, அணுமின்நிலைய பஸ்களில் ரஷ்ய விஞ்ஞானிகள் 90 பேர் உள்ளேசென்றனர். மூத்த விஞ்ஞானியும், அணுஉலை வடிவமைப்பு நிபுணருமான மமினெவ் அலெக்சாண்டர் கூறியதாவது: ""இந்தநாள் எங்களுக்கு மிகச்சிறப்பு வாய்ந்த நாள். இந்த நாள் விரைவில் வரும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். இது,அறிவியல், அணுஉலை தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி. இங்கு மின்உற்பத்தி துவங்கப்படுமென சரியான முடிவு எடுத்ததற்காக, தமிழக அரசு மற்றும் மக்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இங்குள்ள இரு அணுஉலைகளிலும்,கூடிய விரைவில் மின்உற்பத்தியை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக, நாங்கள் கடுமையாக உழைக்கவுள்ளோம்'', என்றார். மற்றொரு மூத்தவிஞ்ஞானி கிரிகோரி கூறுகையில்,""இங்கு கூடிய விரைவில் மின்உற்பத்தியை துவக்கி, இந்திய மக்களுக்காக மகிழ்ச்சியுடன் உழைக்க தயாராகவுள்ளோம்'', என்றார்.
Post a Comment