News Update :
Home » » எல்லா தப்பும் என்மேல தான் சாமியோவ்...ஜெயலலிதா உத்தமிங்கோ...நீதிபதி கேள்விகளும் சசிகலா பதில்களும்

எல்லா தப்பும் என்மேல தான் சாமியோவ்...ஜெயலலிதா உத்தமிங்கோ...நீதிபதி கேள்விகளும் சசிகலா பதில்களும்

Penulis : karthik on Sunday 26 February 2012 | 23:08

 
 
 
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நேற்று 4வது நாளாக நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் முழு விவரம் வருமாறு:

நீதிபதி: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, விலகபுரா கிராமத்தில் ரத்தினவேலு உட்பட 14 பேருக்கு சொந்தமான நிலத்தை வாங்குவதற்காக நீங்கள், சுதாகரன் ஆகியோர் போயஸ்கார்டனில் இருந்து காரில் சம்மந்தப்பட்ட கிராமத்துக்கு சென்று நிலத்தை பார்த்து, பின் அதை வாங்குவது தொடர்பாக ஜவகர்பாபு மற்றும் முத்தையா ஆகியோர் மூலம் நில உரிமையாளர்களிடம் பேசியது உண்மையா?

சசிகலா: அந்த நிலம் வாங்கியது உண்மை. இது தொடர்பாக ஜவகர்பாபு, முத்தையா ஆகியோரை நான் சந்தித்து பேசவில்லை.
நீதிபதி: ஈஞ்சம்பாக்கம் அடுத்த வெட்டுவாங்கேணி என்ற இடத்தில் ரங்கராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை ரூ1.10 லட்சத்துக்கு கிரின் பார்ம் ஹவுஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்தது உண்மையா?
சசிகலா: உண்மை.
நீதிபதி: இந்திராணி ரங்கராஜுக்கு சொந்தமான நிலத்தை ரூ5.07 லட்சம் கொடுத்து வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மைதான். சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்காக இந்த நிலம் வாங்கப்பட்டது.

நீதிபதி: லலிதா குமார் பண்டாரிக்கு சொந்தமான 1.9 ஏக்கர் நிலம் ரூ5.57 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டதா?

சசிகலா: நிலம் வாங்கியது உண்மை தான். அந்த நிலம் ஜெ கிரின் பார்ம் ஹவுஸ் பெயரில் பதிவு செய்யப்பட்டது.
நீதிபதி: சென்னையில் ரூ13.05 லட்சம் மதிப்பிலான வணிக கடையை ரூ8.25 லட்சம் கொடுத்து வாங்கியதாகவும், இதற்கான முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம் குறைவாக செலுத்திய குற்றம் தொடர்பாக?

சசிகலா: அந்த சொத்து ஜெ ஹவுசிங் நிறுவனத்திற்காக 9.8.1994ல் வாங்கப்பட்டது. இதில் கட்டண குறைப்பு எதுவும் செய்யவில்லை.

நீதிபதி: அமானுல்லா என்பவரின் மனைவி அனிபா பெயரில் கடந்த 1989ம் ஆண்டு சென்னை நீலாங்கரை, ஸ்ரீரங்கவேலன் தெருவில் 4 கிரவுண்ட் நிலம் நீங்கள் வாங்கியதாக கூறப்படுவது குறித்து?

சசிகலா: எனக்கு தெரியாது.

நீதிபதி: ஊத்துக்கோட்டையில் சிவ,விஷ்ணு பில்டர்ஸ் உரிமையாளர் ராஜராம் மூலம் 10.10 ஏக்கர் நிலம், மணவாளன் என்பவருக்கு சொந்தமான 12.8 ஏக்கர் நிலம், பேரூர் ராஜாராமுக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலம் (சிறிது சிறிதாக) ஊத்துகுடியில் 9.65 ஏக்கர் நிலம், பாலசுப்ரமணியம், பொன்னுசாமி, சுந்தரம் ஆகியோருக்கு சொந்தமான 10,.29 ஏக்கர் நிலம் ரூ1.02.090க்கும், பாப்பம்மா, வெங்கடேஷ் ஆகியோருக்கு சொந்தமான 8.23 ஏக்கர் நிலம் ரூ. 83,200க்கும், கங்கா, பால, நாராயணசாமி ஆகியோருக்கு சொந்தமான 8.65 ஏக்கர் நிலம் ரூ86,500க்கும், கண்ணியப்பன், சத்தியமூர்த்தி உள்பட பலருக்கு சொந்தமான 6.40 ஏக்கர் நிலம் ரூ.64,050க்கும், துரைசாமி, முனிசாமி உள்பட பலருக்கு சொந்தமான 7.11 ஏக்கர் நிலம் ஸி99,159க்கும், கோவிந்தன், எல்லப்பன் உள்பட சிலருக்கு சொந்தமான 15.71 ஏக்கர் நிலம் ஸி1,57,100க்கும், அண்ணாமலை, கோவிந்தசாமி உள்பட பலருக்கு சொந்தமான 9.50 ஏக்கர் நிலம் ரூ95 ஆயிரத்திற்கும், ஆகிய நிலங்களை மெடோ ஆக்ரே பாரேம் மற்றும் மெட்டல் கிங் நிறுவனங்களுக்கு வாங்கினீர்களா?

சசிகலா: எனக்கு தெரியாது. அப்படி எந்த நிலமும் வாங்கவில்லை.

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்கு ரூ2,81,160 கொடுத்து கார் வாங்கியது உண்மையா?

சசிகலா: வாங்கியது உண்மை.

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக 18.7.1992 அன்று ரூ4.06,205 கொடுத்து வாகனம் வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: கடந்த 18.7.1992ல் உங்கள் பெயரில் கார் வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மை. எனது வங்கி கணக்கில் இருந்து ரூ3,88,376 கொடுக்கப்பட்டது.

நீதிபதி: 30.3.1996ல் 2 கார் நீங்கள் வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மை. எனது வங்கி கணக்கில் ரூ10,60,790 கொடுக்கப்பட்டது.

நீதிபதி: 6.12.1994ல் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு கார் வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மை. சசி என்டர்பிரைசஸ் நிறுவன வங்கி கணக்கில் இருந்து ரூ3,16,537 கொடுக்கப்பட்டது.

நீதிபதி: 25.12.1994ல் மெட் டல் கிங் நிறுவனத்திற்கு வாகனம் வாங்கப்பட்டதா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: 19.1.1995ல் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு மாருதி கார் வாங்கப்பட்டதா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: 18.11.1993ல் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத் துக்கு டெம்போ டிராவலர் வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்காக சுராஜ் மஸ்தா வாகனம் வாங்கப்பட்டதா?

சசிகலா: இந்த வாகனம் ஏற்கனவே வாங்கி, ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது.

நீதிபதி: ஆஞ்சநேய பிரின்டிங் பிரஸ் நிறுவனத்திற்காக 3 சுராஜ் மஸ்தா வாக னம் வாங்கப்பட்டது உண்மையா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக வாகனம் வாங்கப்பட்டது உண்மையா?

சசிகலா: உண்மை. அதற்காக தொகை ரூ3,30,250 அதன் வங்கி கணக்கில் இருந்து செலுத்தப்பட்டது.

நீதிபதி: ஜெயா ப்பளிகேஷன் நிறுவனத்திற்காக அசோக் லேலாண்ட் நிறுவனத்திடம் இருந்து பஸ் வாங்கப்பட்டதா?

சசிகலா: உண்மை.

நீதிபதி: நமது எம்.ஜி.ஆர். நிறுவனத்திற்காக வாகனம் வாங்கப்பட்டதா?

சசிகலா: ஆம்.

நீதிபதி: சென்னையில் உள்ள ஜெயலலிதா வீட்டு முகவரியில் அசோக் லேலாண்ட் நிறுவன பஸ் பதிவு செய்துள்ளது குறித்து?

சசிகலா: அசோக் லேலாண்ட் பஸ் ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்காக வாங்கப்பட்டது. அந்த பஸ்சை எப்படி ஜெயலலிதா வீட்டு முகவரியில் பதிவு செய்ய முடியும். இது தவறான கருத்து. ஜெயா பப்ளிகேஷன் நிறுவனம் பெயரில் பதிவு செய்து நான் கையெழுத்து போட்டுள்ளேன்.
நீதிபதி: டெல்லியில் பதிவு செய்யப்பட்ட, குடியரசு தலைவர் பயன்படுத்திய பென்ஸ் காரை ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்கு வாங்கியது உண்மையா?

சசிகலா: 1991ம் ஆண்டு ஜனாதிபதி பயன்படுத்திய பென்ஸ் காரை, சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஸி9.15 லட்சம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளார். அந்த காரை கடந்த 1993ம் ஆண்டு ரூ6.76 லட்சம் கொடுத்து ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்காக வாங்கினோம். இவ்வாறு நீதிபதியின் கேள்விகளுக்கு சசிகலா பதில் அளித்தார்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger