சைத்தான் என்ற படத்தைப் பார்த்த ஷாருக்கான் அப்படத்தை வெகுவாக புகழ்ந்தார். சைத்தானை புகழ்ந்தால் சைத்தான் நம்மைவிடாது என்பது புராணம். ஷாருக்கான் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.
சைத்தானை இயக்கிய பிஜாய் நம்பியார் விக்ரமை வைத்து டேவிட் என்ற படத்தை இயக்கி வருகிறார். பெயர் சிங்கிளாக இருந்தாலும் கதைப்படி 3 டேவிட்கள் வருகிறார்கள். அதில் முக்கியமான டேவிட் விக்ரம். இன்னொருவர் தமிழின் பிரபல நடிகராக இருப்பார் என்கிறார்கள். நம்பியாரின் மூன்றாவது சாய்ஸ் ஷாருக்கான்.
டேவிட் படத்தை இந்தி, தமிழ் என இரு மொழிகளில் இயக்கி வருவதால் ஷாருக்கின் பெயர் இந்திப் படத்துக்கு பெரும் மார்க்கெட்டாக அமையும். மேலும் ஷாருக் நடித்தால் மட்டுமே அந்த கதாபாத்திரம் பேசப்படும் என நினைக்கிறார் பிஜாய் நம்பியார். இந்தப் படத்துக்கு ஷாருக்கின் 10 நாள் கால்ஷீட் போதும். சைத்தானை ரொம்பப் புகழ்ந்தவர் என்பதால் டேவிட்டில் நடிக்க ஒப்புக்கொள்வார் என நினைக்கிறார் பிஜாய்.
ஒரே படத்தில் விக்ரம், ஷாருக்கான். கேட்கவே நல்லாயிக்கே.
Post a Comment