உத்தமபாளையம் ஒன்றியம், ராமசாமி நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் லாவண்யா ,15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தந்தை இல்லை. தாய் பராமரிப்பில் உள்ளார். அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வடமலைராஜ், 45 (விவாகரத்து பெற்றவர்) லாவண்யாவை, அவரது தாய் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தார்.
இன்று ரகசிய திருமணம் நடத்த ஏற்பாடானது.நிறுத்தம்: தன்னை சந்தித்த தோழியிடம், விவரங்களை லாவண்யா கூறினார். ஆசிரியர்கள், சின்னமனூர் கிரீன் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தந்தனர்.
தொண்டு நிறுவன செயலர் போஸ், மகளிர் போலீசிடம் புகார் கொடுத்தார்.இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா நடவடிக்கையால் கட்டாய திருமணம் நிறுத்தப்பட்டது. மாணவியைத் தொடர்ந்து படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
Post a Comment