நள்ளிரவு பார்ட்டியில் நடிகை ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் ஒருவர் அத்துமீறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் அதனை ப்ரியாமணி மறுத்துள்ளார். சி.சி.எல் எனப்படும் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது.கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு அங்குள்ள ஸ்டார் ஹோட்டலில் விடிய விடிய உற்சாக பான விருந்து நடைபெற்றுள்ளது.
பார்ட்டியில் பங்கேற்ற ப்ரியாமணி, போதையில் அதிகாலையில் தனது அறைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது போதையில் இருந்த இந்தி நடிகர் சச்சின் ஜோஷி, ப்ரியாமணியின் கையை பிடித்து இழுத்து, கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாகவும், ப்ரியாமணி அவரை தள்ளி விட்டு விட்டு தப்பியதாகவும் கேரள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனை ப்ரியாமணி மறுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கொச்சியில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை.யாரோ வேண்டுமன்று வதந்தி கிளப்பி விட்டிருக்கிறார்கள், என்று கூறி மறுத்திருக்கிறார் முத்தழகி ப்ரியாமணி.
Post a Comment