இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க கடும் முயற்சிகள் மேற்கொண்டு வரும் இந்த நிலையில் இதனை மறுப்பக்கம் மாற்றும் வகையில் தற்போது இந்த சம்பவம் வெளியாகியுள்ளது.கடந்த தினங்களில் தங்கல்லையில் வெள்ளைக்கார பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற வேளையில்,வெள்ளைக்காரர் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.இந்த நிலையில் மற்றுமொறு வெள்ளைக்கார யுவதி நித்திரையில் இருந்து சமயம், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மாத்தறை திக்வெலையில் பதிவாகியுள்ளது.மாத்தறை திக்வலை பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அழகிய யுவதி ஒருவர் ஹேட்டல் அறையில் இனந்தொரியாத நபரினால் பாலியல் வன்புணர்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் திக்வெல்ல காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (06) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.குறித்த யுவதி,தமது காதலனுடன் 2.30 மணிவரைக்கும் மது அருந்திவிட்டு, பின்னர் தமது காதலனுடன் நித்திரைக்குச் சென்றுள்ளார்.அதிக மது போதையில் இருந்த அவரும், அவரது காதலனும் ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ளனர்.அதிகாலை 3 மணியளவில் அந்த யுவதி திடீரென விழித்தெழுந்த நிலையில், யாரோ ஒருவர் அவருடன் உடலுறவு கொண்டிருந்துள்ளார்.முதலில் அந்த பெண் தன் காதலனே தன்னுடன் உறவு கொண்டிருக்கிறார் என்று நினைத்துள்ளார்.எனினும் தன்னுடன் இருந்த நபர் வேறொருவர் என சற்று நேரத்திற்கு பின்னரே தெரியவந்துள்ளது.
அந்த கட்டிலிலேயே அடுத்த பக்கத்தில் தமது காதலன் கடும் நித்திரையில் இருந்துள்ளார்.இந்தநிலையில்,அவர் கூக்குரலிட்டுள்ளார்.இந்த நிலையில் குறித்த நபர் நிர்வாணமாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.இச் சம்பவத்தை தொடர்ந்து எழுந்துள்ள நிலைமைகளை தொடர்ந்து இலங்கை வந்திருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிலிருந்து வெளியேறினர்.இந்த சம்பவத்தை தொடந்து குறித்த பிரதேசத்தில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு வேண்டாம் என்று போய்விட்டது.
Post a Comment