பிரதமர் மன்மோகன்சிங் ஜப்பானிய பிரதமருக்கு டெல்லியில் விருந்து அளித்தபோது அதில் பங்கேற்க நடிகர் தனுஷ் அழைக்கப்பட்டு இருந்தார். 'கொலைவெறிடி' பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானதால் தனுசுக்கு அந்த வாய்ப்பு கிட்டியது.
அதுபோல் கமல் மகள் ஸ்ருதியும் பிரதமர் விருந்தில் பங்கேற்க அழைக்கப்பட்டு உள்ளார். மொரீசியஸ் பிரதமர் நவின் ராம்கூலத்துக்கு டெல்லி ரேஸ்கோர்சில் உள்ள தனது வீட்டில் மன்மோகன்சிங் விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் கலந்து கொள்ளும்படி ஸ்ருதிக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
இதுகுறித்து ஸ்ருதி கூறும்போது, பிரதமர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிட்டியதை கவுரவமாக நினைக்கிறேன். இது எனக்கு பேரானந்தமாகவும் இருக்கிறது. இந்த இளம் வயதில் எனக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைத்து இருப்பதை அதிர்ஷ்டவசமாக கருதுகிறேன் என்றார்.
Post a Comment