கர்நாடக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் சவதி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல் இருவரும் செல்பேசியில் ஆபாசப் படம் பார்த்ததாகவும், அந்தப் படத்தை துறைமுகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கிருஷ்ணபாளேமர் இவர்களுக்கு அனுப்பி வைத்ததாகவும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இது கர்நாடகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்த விவகாரம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், ஆவேசத்தையும் உருவாக்கியுள்ளது. 3 பேரும் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதையடுத்து 3 பேரும் ராஜினாமா செய்தனர்.
ஆபாசப்பட விவகாரத்தை விசாரிக்க சட்டப் பேரவைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணை அறிக்கை வரும்வரை அவைக்கு வர 3 முன்னாள் அமைச்சர்களுக்கும் தடை விதித்து சட்டப் பேரவைத் தலைவர் கே.ஜி. போப்பையா உத்தரவிட்டார்.
கர்நாடக மந்திரிகள் 3 பேருடைய பதவியை பறித்த சர்ச்சைக்குரிய ஆபாச படம் எது? என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் நாட்டில் பெண் கற்பழித்து கொலை செய்யப்படும் காட்சியை பார்த்ததாக மந்திரி லட்சுமண் சவதி கூறி இருந்தார்.
4 நிமிடம் 12 வினாடிகள் ஓடக்கூடிய, அபிக்' என்ற செல்போன் நிர்வாண படத்தை அவர்கள் பார்த்ததாக மற்றொரு தகவல் கூறுகிறது. அந்த செல்போன் மந்திரி கிருஷ்ணபாலேமருக்கு சொந்தமானது. உடுப்பி தீவுத்திருவிழா ஆபாச நடன காட்சிகளும் அந்த செல்போனில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment