News Update :
Home » » சட்டசபையில் பலான படம் பாரதீய ஜனதாவினரின் சாயம் வெளுத்துவிட்டது: கபில்சிபல் தாக்கு

சட்டசபையில் பலான படம் பாரதீய ஜனதாவினரின் சாயம் வெளுத்துவிட்டது: கபில்சிபல் தாக்கு

Penulis : karthik on Wednesday, 8 February 2012 | 18:44

 
 
 
கர்நாடக சட்டசபையில் செல்போனில் மந்திரிகள் ஆபாச படம் பார்த்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் பாரதீய ஜனதா ஆளும் மாநிலம் என்பதால் இதை அந்த கட்சிக்கு எதிராக காங்கிரஸ் பயன்படுத்திக்கொண்டது. ஏற்கனவே ஊழல் புகாரில் எடியூரப்பாவை பதவி நீக்ககோரி காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. தற்போது ஆபாசபட விவகாரத்தில் மந்திரிகளை நீக்க வேண்டும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியது. இதனால் 3 மந்திரிகள் ராஜினாமா செய்தனர்.
 
இதுபற்றி மத்திய மந்திரி கபில்சிபல் கூறியதாவது:-
 
பாரதீய ஜனதா கட்சியினர் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரிந்துவிட்டது. அவர்களது சாயம் வெளுத்துவிட்டது. அந்த கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லாவிதமான கேளிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். எப்போதாவது அரசியல் நிகழ்வுகள்தான் கேளிக்கையாக இருக்கும். இப்போது அவர்களது அரசியல் மற்றவர்களுக்கு கேளிக்கையாகிவிட்டது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் புகார் கூறப்பட்ட மந்திரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 3 பேரும் ராஜினாமா செய்து விட்டனர். அவர்கள் மீதான புகார் உண்மை என்றால் அது கவலைப்பட வேண்டியது ஒன்று என்றார். இந்நிலையில் புகார் கூறப்பட்ட ஆரம்பக்கட்ட நிலையிலேயே நாங்கள் நடவடிக்கை எடுத்து இருக்கிறோம் என்று பாரதீய ஜனதா தலைவர் தனஞ்செய்குமார் கூறினார்.

 
 
 
 
 
 


Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger