News Update :
Home » » பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கேற்ற உடைகள்!

பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கேற்ற உடைகள்!

Penulis : karthik on Friday, 6 January 2012 | 00:55

பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் தங்களுக்குப் பொருத்தமான உடைகளைக்
கண்டறிவது என்பது சற்று சிரமமான வேலைதான்.
சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு பெரும்பாலும் இந்த சிரமம்
இருப்பதில்லை. மேலும் அவர்களுக்கு மார்பகங்களை எடுப்பாக்கி்க் காட்டும்
வகையிலான உடைகள் தாராளமாக கிடைக்கின்றன. ஆனால் பெரிய மார்பகப்
பெண்களுக்கு இந்த வசதிகள் இல்லை.
பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் எந்த மாதிரியான உடைகளைத் தேர்வு
செய்யலாம் என்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ...
*. மூடிய கழுத்துடைய உடைகளை ஒருபோதும் தேர்வு செய்யாதீர்கள்.
அப்படிப்பட்ட உடைகள் உங்களது மார்பகங்களை மேலும் பெரிதானதாக காட்டி
விடும்.
*. அதிக கிளீவேஜ் தெரியும்படியானஉடைகளையும் தவிர்ப்பது நல்லது.இது
அழகாகக் காட்டுவதற்குப் பதில் அகோரமாக காட்டி விடும்.
*. மிகவும் டைட்டான உடைகளைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.சற்றே லூசான
உடைகளைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.
*. குர்தா உள்ளிட்ட உடைகளைத் தாராளமாக தேர்வு செய்யலாம். இது அழகாகவும்
காட்டும், அகோரத்தையும் குறைக்கும். இதுபோன்ற நீளமான உடைகள் உங்களது
உடல்வனப்பைக் காட்டுமே தவிர அதன் அளவைக் குறைத்தேக் காட்டும். எனவே இது
சவுகரியமானது.
*. சல்வார் போன்ற உடைகளை அணியும் போது துப்பட்டாவை மார்புக்குக் குறுக்கே
இருப்பது போல, மார்பகங்களை மூடுவது போல போட்டுக் கொள்வது நன்றாக
இருக்கும்.
*. கழுத்தை ஒட்டிய பேஷன் கவரிங் நகைகளை போட்டுக் கொள்வது இன்னொரு
புத்திசாலித்தனமான செயல். இதுபோல போடும்போது மார்பகங்களுக்குப் பதில்
உங்களது கழுத்தை நோக்கி மற்றவர்கள் பார்வை செல்லும். உங்களுக்கும் அழகு
கூடி, தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.
இதுபோல சின்னச் சின்ன மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் உங்களது அழகையும்
கூட்டலாம், மற்றவர்களின் பார்வையிலிருந்தும் தப்பலாம்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger