News Update :
Home » » சீனர்கள் இலங்கை தொழிற்சந்தையை இலக்கு வைத்து படையெடுக்கின்றனர்

சீனர்கள் இலங்கை தொழிற்சந்தையை இலக்கு வைத்து படையெடுக்கின்றனர்

Penulis : karthik on Friday, 6 January 2012 | 17:56

சீனப் பிரஜைகள் இலங்கை தொழிற்சந்தையை இலக்கு வைத்து படையெடுத்து வருவதாக
கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பல்லாயிரக் கணக்கான சீனர்கள் கடந்த ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
2011ம் ஆண்டில் சுமார் 60000 சீனப் பிரஜைகள் இலங்கைக்கு விஜயம்
செய்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சுற்றுலாத்துறை அமைச்சின்
உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
சீன அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களில்
பணியாற்றும் நோக்கிலேயே பல சீனர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர்.
இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்த 60000 சீனப் பிரஜைகளில், 9000 பேர்
இன்னமும் நாடு திரும்பவில்லை.
எவ்வாறெனினும், இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு சீனர்களின் வருகையை
சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பாகவே தனது புள்ளி விபரங்களில்
வெளிப்படுத்தியுள்ளது.
2011ம் ஆண்டில் 90000த்திற்கும் மேற்பட்ட சீனப் பிரஜைகள் இலங்கைக்கு
விஜயம் செய்துள்ளனர்.
முன்னைய ஆண்டை விடவும் இந்த எண்ணிக்கை 15 வீதம் அதிகமாகும்.
எனினும், இந்த சுற்றுலாப் பயணிகளில் பலர் இலங்கையில் ஓய்வெடுப்பதற்காக
செல்லவில்லை எனவும், உழைப்பை வழங்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில்
சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தென் பகுதியில் அதிகளவான சீனர்கள் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளுர் உழைப்பாளர்கள் பலருக்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெறவில்லை என்பதே
யதார்த்தமாகும். சீன அரசாங்கம் மிகவும் கருணையுடன் இலங்கையின்
அபிவிருத்திக்காக பங்களிப்பு செய்வதனைப் போன்று தோன்றிய போதிலும், உண்மை
நிலைமை வேறுவிதமாக அமைந்துள்ளது.
சீன நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களில்ச
சீனர்கள் கடமையாற்றி வருகின்ற அதேவேளை, சீன அரசாங்கமே கடன்களை
வழங்கியுள்ளது.
இதன்படி, இலங்கைக்கு வழங்கப்பட்ட பணம் சீனர்களுக்கு மீளவும்
சென்றடைகின்றது. சீனாவுடனான உறவுகள்; வலுப்பட்டுள்ள அதேவேளை ஏனைய
நாடுகளுடனான உறவுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குறித்த கொழும்பு ஊடகம்
தெரிவித்துள்ளது
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger