News Update :
Home » » இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சினிமா தயாரிப்பாளர், மேக்கப்மேன் கைது; போலீஸ்காரர் சஸ்பெண்டு

இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சினிமா தயாரிப்பாளர், மேக்கப்மேன் கைது; போலீஸ்காரர் சஸ்பெண்டு

Penulis : karthik on Friday 6 January 2012 | 06:38

சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி இளம்பெண்களை விபச்சாரத்தில்
ஈடுபடுத்திய சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து
நடவடிக்கை எடுக்கவும் அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் போலீஸ் கமிஷனர்
திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையாளர் ராதிகா, கூடுதல் துணை
ஆணையாளர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் விபச்சாரத் தடுப்பு பிரிவு உதவி
ஆணையாளர் கிங்ஸ்லி, இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ ஆகியோர் சென்னையில் விபச்சார
தொழில் செய்வோர் பற்றி ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது தி.நகரில்
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஏமாற்றி விபச்சாரத்தில்
ஈடுபடுத்துவதாகரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தொலைபேசி
மூலம் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் போல் பேசினார்கள்.
மறுமுனையில் பேசிய நபர் தன்னிடம் அழகான துணை நடிகைகள் இருப்பதாகவும்
குறிப்பிட்ட இடத்திற்கு ரூ. 10 ஆயிரத்துடன் வந்தால் அழைத்து செல்வதாக
கூறினார். அவர் கூறிய இடத்திற்கு வாடிக்கையாளர் போல் சென்ற விபச்சாரத்
தடுப்பு பிரிவு போலீஸ்காரரை அந்த நபர் தி.நகரில் தேவ் ஆனந்த் பிலிம்ஸ்
என்ற அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.
அவர்களை பின் தொடர்ந்து சென்ற இன்ஸ்பெக்டர் அந்த நிறுவனத்தில் விபச்சாரம்
நடப்பதை உறுதி செய்து கொண்டு அதிரடியாக புகுந்து அங்கு விபச்சாரத்
தொழில் நடத்தி வந்த செல்வநாயகன் (54) மற்றும் அவரின் உதவியாளர்
ஞானபிரகாசம் (64) ஆகியோரை கைது செய்தனர்.
அங்கிருந்த 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் செல்வ நாயகன்
தேவ்ஆனந்த் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சினிமா படம்
தயாரிப்பதாகவும், சில படங்களுக்கு துணை இயக்குனராக இருந்ததாகவும்
தெரிவித்தார்.
தற்போது 'பேசாதே' என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்குவதாகவும் கூறினார்.
சினிமா மேக்கப்மேன் கைது
இதே போல் சினிமாவில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக
சென்னை ஆழ்வார்திருநகரில் ஒரு அபார்ட்மெண்டில் 3 இளம்பெண்களை தங்க வைத்து
விபச்சாரத் தொழில் செய்து வந்த நாகேந்திரன் (50) மற்றும் அவருக்கு
உதவியாக இருந்த சினிமா மேக்கப்மேன் கண்ணதாசன் (30) ஆகியோரையும் போலீசார்
கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சென்னையைச் சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். கைது
செய்யப்பட்ட அனைவரும் சைதாப் பேட்டை 4-வது பெரு நகர குற்றவியல் நடுவர்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ்காரர் சஸ்பெண்டு
கடந்த 2 மாதத்துக்கு முன்பு தி.நகரில் சித்தி விநாயகர் கோவில் தெருவில்
உள்ள ஒரு அபார்ட்மெண்டில் விபசார தடுப்பு போலீசார் திடீர் சோதனை
நடத்தினர். இதில் அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக சுபா என்கிற
நான்சி என்ற பெண் கைது செய்யப்பட்டார்.
கைதான பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்த அபார்ட்மெண்ட் வீட்டை
மாதவரத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவர் லீசுக்கு எடுத்து இருந்ததும்
அவர் அயனாவரத்தில் போலீஸ்காரராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.
அரிகிருஷ்ணன் மீது துறை ரீதியானவிசாரணை நடந்தது. இதில் அவருக்கும், கைதான
சுபாவுக்கும்தொடர்பு இருந்ததும் லீசுக்கு எடுத்த வீட்டை அவரிடம்
ஒப்படைத்து விபசார தொழில் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அரிகிருஷ்ணன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
போலீஸ்காரர் அரிகிருஷ்ணன் 2008-ம் ஆண்டு விபசார தடுப்பு பிரிவு
போலீஸ்காரராக இருந்ததாகவும் அப்போது சுபாவுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும்
கூறப்படுகிறது
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger