முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் கல்யாணச் செலவை நான் செய்யவில்லை. மொத்தச் செலவையும் பெண் வீட்டார்தான் கவனித்துக் கொண்டனர் (0என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதால், சிவாஜி கணேசன் குடும்பத்தாரும் இந்த வழக்கில் விசாரிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் அவரால் வளர்ப்பு மகன் என்று அறிவிக்கப்பட்டார் சுதாகரன். இதையடுத்து அவருக்கும் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகள் வயிற்றுப் பேத்தியான சத்தியா என்கிற சத்தியவதிக்கும் திருமணம் கோலாகலமாக நடந்தது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த பிரமாண்டத் திருமணமும் ஒன்றாக மாறியுள்ளது.
இந்தியாவே வியந்து விழி பிதுங்கி நின்றது சுதாகரன் கல்யாணத்தைப் பார்த்து. அந்த அளவுக்கு பணத்தை வாரியிறைத்து படு பிரமாண்டமாக திருமணத்தை நடத்தினர். சிவாஜி கணேசன், ஜெயலலிதா முன்னிலையி்ல படு கோலாகலமாக நடந்த இந்தத் திருமணத்திற்காக ரூ. 6 கோடி செலவிடப்பட்டதாக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நேற்று பெங்களூர் தனி கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது, திருமணத்திற்கான செலவை நான் செய்யவில்லை. மாறாக பெண் வீட்டார்தான் செய்தனர் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா. இதன் மூலம் 6 கோடி ரூபாய் செலவையும் சிவாஜி கணேசன் வீட்டார்தான் செய்ததாக சுட்டிக் காட்டியுள்ளார் ஜெயலலிதா. இதனால் இதுகுறித்து சிவாஜி கணேசன் வீட்டாரிடம் விசாரணை நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக கருத்து எழுந்துள்ளது.
அந்த செய்தியை படிக்க ...
Post a Comment