தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தியில் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினரால் பாலியல் பலாத்கார கொடுமைக்குள்ளாக்கப்பட்ட 18 பெண்களில் ஒருவரான அமுதா என்கிற அமரக்கா என்ற 35 வயதுப் பெண் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஊராட்சித் தலைவர் பதவிக்கு இவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வாச்சாத்தியில் கடந்த 1992ல் நடந்த பாலியல் அட்டூழியத்தில் சிக்கி சிதைக்கப்பட்டவர்கள் மொத்தம் 18 பெண்கள். இவர்களில் ஒருவரான அமுதா, பே.தாதம்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இது பழங்குடியினப் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பதவியாகும். வாச்சாத்தி கிராமம், இந்த ஊராட்சி எல்லைக்குள்தான் உள்ளது.
தலைவர் பதவிக்கு அமுதா தவிர தற்போதைய தலைவர் தனபாக்கியம் உள்ளிட்ட 5 பேர் களத்தில் உள்ளனர். மேலும் 12 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 42 பேர் போட்டியிடுகின்றனர்.
அமுதாவின் கணவர் பெயர் சுப்பிரமணியம். இவர் ஒரு கூலித் தொழிலாளி ஆவார். இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தேர்தல் களம் காண்பது அமுதாவுக்கு இது முதல் முறையாகும்.
Post a Comment