சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளியான படம் 'ஏழாம் அறிவு'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தார். இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
'ஏழாம் அறிவு' படம் குறித்து நடிகர் சூர்யா கூறியிருப்பது " ஏழாம் அறிவு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
'ஏழாம் அறிவு' படம் என் மனதுக்கு நெருக்கமான படம். எனது திரையுலக வாழ்வில் சிறந்த ஐந்து படங்களில் இப்படம் கண்டிப்பாக இடம் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நமது வரலாற்றில் பல்வேறு சூப்பர் ஹீரோக்கள் இருந்து இருக்கிறர்கள். அவற்றில் ஒருவர் தான் போதிதர்மன். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு அற்புதமான இயக்குனர். மரபணு மாற்றம் போன்ற விஷயங்களைக் கூட இப்படி ஒரு படத்தில் இணைத்து அற்புதமாக இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாது இப்படத்தில் இளைஞர்களுக்கான நல்ல கருத்துக்களும் இருக்கிறது "
Post a Comment