நான் 'மிரர்' மாதிரி. எங்கிட்ட எப்படி நடந்துக்கிறாங்களோ, அதை மாதிரிதான் நானும் நடந்துப்பேன் என்றார் சிம்பு. ஒஸ்தி படம் ஒரே ஷெட்யூலில் முடிந்திருக்கிறதல்லவா, இந்த வியத்தகு விஷயம் பற்றி மூக்கில் விரல் வைக்கும் இன்டஸ்ட்ரிக்கு சிம்பு அறிவித்திருக்கும் மெசேஜ்தான் இது.
படப்பிடிப்பில் இவரை குழந்தை போல பார்த்துக் கொண்டார்களாம் இயக்குனர் தரணியும், கூட நடிக்கும் ஆர்ட்டிஸ்டுகளும். இதனால்தான் இப்படத்தை 70 நாட்கள் நான்-ஸ்டாப்பாக எடுக்க முடிந்தது. இவ்வளவு சீக்கிரம் படம் முடிந்ததற்கு நான் காரணமல்ல, இவர்கள்தான் என்றார் சிம்பு.
ஒஸ்தி பிரஸ்மீட்டுக்கு முடிந்தவரை காலதாமதமாக வந்த சிம்பு, அந்த தாமதத்திற்கான காரணத்தை மயில்சாமியை விட்டு சொல்ல வைத்தாரே தவிர, அவரே சொல்லவில்லை. அதற்காக வருந்தவும் இல்லை. (அரசியல்ல பெரிய எதிர்காலம் இருக்கு பிரதர்)
இந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டபோது சிக்ஸ்பேக் வைக்கிற எண்ணமெல்லாம் இல்லை. ஏனென்றால் நான் மற்ற படங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது. உடல் அளவில் மாற்றம் வந்தால் கன்ட்டினியுடி மிஸ் ஆகும். ஆனால் ஒஸ்தி படப்பிடிப்பு துவங்கிய சிறிது நாட்களுக்குள்ளேயே பத்திரிகைகளில் நான் தினந்தோறும் ஜிம்முக்கு போவதாகவும், இரண்டு மணி நேரம் வொர்க் அவுட் செய்வதாகவும் எழுத ஆரம்பிச்சிட்டீங்க. சரி, இப்படியே விட்டால் இதே பார்வையோடு உள்ளே வரும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக போய்விடுமே என்றுதான் வொர்க் அவுட் செய்ய ஆரம்பித்தேன்.
காலையில் மூணு மணி நேரம், மாலையில் மூணு மணிநேரம் வொர்க் அவுட் பண்ணினேன். உங்க புண்ணியத்தால் என் உடலும் மனசும் இப்போ ஆரோக்கியமா இருக்கு. நன்றி என்றார் சிம்பு.
பொதுவாக சிம்பு படம் என்றால் பாடல்கள் பட்டைய கிளப்பும். இந்த படத்திலும் அதற்கான அறிகுறிகள் இப்பவே தெரிய ஆரம்பித்திருக்கிறது. யுவன்சங்கர்ராஜாதான் சிம்புவின் பெஸ்ட். இந்த படத்தில் தமன். எப்படி நடந்தது இந்த வித்தை?
ஒரே மியூசிக் டைரக்டருடன் வொர்க் பண்ணும் போது லேசா மாற்றம் வந்தால் நல்லாயிருக்குமேன்னு தோணும். யுவனிடம் இதை சொல்லி ஒஸ்தியில் யாரை இசையமைக்க வைக்கலாம்னு யோசிக்கிறேன் என்று சொன்னேன். அவர்தான் தமன் நல்லா மியூசிக் பண்ணுறார். அவரை ட்ரை பண்ணுங்களேன் என்றார். இப்போ வர்ற யங் ஜெனரேஷன் அவ்வளவு ஃபிரண்ட்லியாவும் ஈகோ இல்லாமலும் இருக்காங்க என்றார் சிம்பு.
Post a Comment