வரும் தைத் திருநாளில் நண்பன் படம் வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இப்போதெல்லாம், தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் ரிலீசாகும் படங்களுக்கு இரண்டு மாதங்கள் முன்பாகவே தியேட்டர்களில் இடம்பிடித்தாக வேண்டிய நிலை.
எனவே பொங்கலுக்கு வெளியாகப் போகும் படங்கள் என்னென்ன என்பதை இப்போதிலிருந்தே தெளிவுபடுத்த ஆரம்பித்துள்ளனர்.
முதலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள படம் விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள நண்பன்.
இதுகுறித்து இயக்கநர் ஷங்கர் கூறுகையில், "நண்பன் படம் 100 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. இந்த தீபாவளிக்கு வேலாயுதம், பொங்கலுக்கு நண்பன் என விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். டிசம்பரில் நண்பன் ஆடியோ வெளியாக உள்ளது," என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் நண்பன் படம் பொங்கலுக்கு வருவது உறுதியாகிவிட்டது.
Post a Comment