ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. ஆடியோ ரிலீஸ் வரைக்கும் வந்துவிட்டது சிம்பு நடித்த ஒஸ்தி. 'சிம்பு நடித்தும் சீக்கிரம்' என்பதுதான் இந்த செய்தியின் விசேஷம். அவர் எப்பவோ துவங்கிய போடா போடி, கெட்டவன், வேட்டை மன்னன் ஆகிய படங்கள் எல்லாம் இன்னும் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதை கவனிக்க...
ராஜா அண்ணாமலை புரத்தில் இருக்கும் இமேஜ் ஆடிட்டோரியத்தில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அடிப்படையில் அஜீத் ரசிகரான சிம்பு, இந்த விழாவுக்கு விஜய்யை அழைத்திருந்ததுதான் ஆச்சர்யம். படத்தின் இயக்குனர் தரணி என்பதால் இந்த கில்லி மேட்டர் நடந்திருக்கலாம். ஒரு காலத்தில் எதிரும் புதிருமாகவும் ஈக்வல் திறமைசாலிகளாகவும் இருந்த டி.ராஜேந்தரும், கே.பாக்யராஜும் ஒரே மேடையில் இருப்பது எவ்வளவு கண் கொள்ளாக் காட்சி? தனக்கேயுரிய பாணியில் அரட்டை அடித்தார் பாக்யராஜ்.
டி.ஆருக்கும் சிம்புவிற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது என்னவென்று தெரியும? என்று கேட்க, ரசிகர்கள் "தாடி தான் அது" என்றனர். அதற்கு அவர் "இல்லை.... டி.ஆர் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்கியது இல்லை. ஆனால் சிம்பு கிசுகிசுக்களில் அடிக்கடி சிக்கி கொள்கிறார்" என்று கூற பறந்ததே விசில்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நண்டு ஜெகன் திடீரென்று குறுக்கே புகுந்து 'எனக்கு ஒரு வித்தியாசம் தெரியுமே.. டி.ஆர் இதுவரைக்கும் கிஸ் பண்ணதே இல்லை.. எஸ்.டி.ஆர் இதுவரைக்கும் எந்த கிஸ்ஸையும் மிஸ் பண்ணியதே இல்லை " என்று கூற, அரங்கினுள் மறுபடியும் விசிலும் சிரிப்பும் களை கட்டியது.
Post a Comment