தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஜய்யின் தந்தையும் தற்போதைய பொறுப்புத் தலைவருமான எஸ் ஏ சந்திரசேகரின் அணிக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது கேயார் அணி.
கே.ஆர். அணி வேட்பாளர் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அணியில் தலைவராக கேயாரும்,
துணைத் தலைவர்களாக சத்யஜோதி டி.ஜி. தியாகராஜன், டி.சிவா ஆகியோரும், செயலாளர்களாக கே.முரளிதரன், ஏ.எம்.ரத்னம் ஆகியோரும், பொருளாளராக அன்பாலயா பிரபாகரனும் போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு கமீலா நாசர், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஞானவேல்ராஜா, கே. பாலு, அழகன் தமிழ்மணி, ஆபாவாணன், கே.விஜயகுமார், எம்.கபார், எச்.முரளி, என்.சுபாஷ் சந்திரபோஸ், கே.முருகன், எஸ்.எஸ்.துரைராஜ், ருக்குமாங்கதன், ரவீந்திரன், ஏ.என்.சுந்தரேசன், ராஜேந்திரன், நந்தகோபால், விஜயமுரளி, மன்னன், பி.ஜி.பாலாஜி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
தங்கள் அணி வென்றால், "தயாரிப்பு செலவு குறைக்கப்படும், தொழிலாளர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், டி.வி., கேபிள் டி.வி.யில் இருந்து ரூ. 10 லட்சம் சிறு முதலீட்டு படங்களுக்கு கிடைக்க வழி செய்யப்படும், தயாரிப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும்," என வாக்குறுதி அளித்துள்ளது கேயார் அணி..
Post a Comment