தங்களுக்கு பிடிக்காத தலைவர்களை இரட்டை அர்தத்திதல் தொண்டர்கள் போட்டு தாக்கும் ரவுசு கரூரில் பிரபலமாகி வருகிறது.
நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தனித்தனியே களம் காண்கின்றனர். இதனால் கட்சியின் அடிமட்ட தொண்டனுக்கு மவுசு கூடியுள்ளது.
தாங்கள் விரும்பிய வேட்பாளர்கள் அமையாததால் கோபமடைந்துள்ள தொண்டர்கள், தங்களது கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள, தங்களுக்குப் பிடிக்காத வேட்பாளர்களுக்குப் போன் போட்டு அண்ணே தெருவுக்கு எப்ப வருவீங்க என டபுள் மீனிங்கில் கேட்கின்றனராம். ஏதோ பிரசாரத்திற்கு எப்ப வருவீங்க என்றுதான் தொண்டர்கள் கேட்பதாக நினைத்து ஏமாறும் வேட்பாளர்கள், ரெண்டு நாள்ல வந்துருவோம்ல என்று கூறுகின்றனராம்.
இந்தப் பதிலை சக தொண்டர்களிடம் பகிர்ந்து கொண்டு, அண்ணன் இப்ப தான் வேட்பு மனு தாக்கல் செய்தாரு .. ஆனால் நாளைக்கே தெருவுக்கு வந்துருவேனு சொல்றாரு... சரி அவரு வராட்டி நாம கொண்டாந்துவோம் ( ! ) என நக்கல் நையாண்டியாக போட்டு தாக்குகின்றார்களாம்.
எப்படியெல்லாம் உக்காந்து யோசிக்காறாங்க பாருங்கப்பா!
Post a Comment