தாம்பரம் முடிச்சூர் சாலையில் 34 சென்ட் நில விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி பழனியப்பனின் மகன் சொக்கலிங்கம் கிரயம் பெற்ற நிலத்தை நடிகர் வடிவேலு அபகரித்துவிட்டார் என்று நில மோசடி புகார் கொடுத்ததாகவும், அதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் நடிகர் வடிவேலு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி பழனியப்பன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்தார். நீதிபதி பெரிய கருப்பையா இந்த வழக்கை விசாரித்து, வங்கி அதிகாரி பழனியப்பனும், அவரது மகன் சொக்கலிங்கம் ஆகிய இருவரும், நடிகர் வடிவேலுவின் பெயரையும், புகழையும் களங்கப்படுத்தும் விதமாக எந்த விதமான பொய்யான தகவலோ, அவதூறான செய்திகளையோ, பத்திரிகைகளுக்கோ, தொலைக்காட்சிகளுக்கோ, வேறு எந்த விதமான எலக்ட்ரானிக் மீடியாக்களுக்கோ கொடுக்கக்கூடாது என்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.
Post a Comment