பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சிகளின்போது நடனமாட மறுத்த மனைவியின் மூக்கு மற்றும் உதடுகளை அறுத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், வெஹாரி நகரைச் சேர்ந்தவர் முகமது அப்பாஸ். அவரது மனைவி குல்ஷன் பீபீ. திருமணங்களுக்கு சென்றால் அங்கு நடனமாடுமாறு அப்பாஸ் குல்ஷனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் நடனமாட முடியாது என்று தொடர்ந்து குல்ஷன் மறுத்து வந்துள்ளார்.
தான் இவ்வளவு வற்புறுத்தியும் தனது மனைவி நடனமாட மறுக்கிறாரே என்று அப்பாஸ் ஆத்திரம் அடைந்தார். கோபம் கண்ணை மறைக்க அவர் தனது மனைவியின் மூக்கு மற்றும் உதடுகளை அறுத்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பாஸை கைது செய்தனர்.
குல்ஷன் பீபீ சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Post a Comment