சாத்தான்குளம் ஒன்றிய
இந்து முன்னணி சார்பில்
இந்து முன்னணி மாநாடு நடந்தது.
மேலசாத்தான்குளம் முத்தாரம்மன் கோவில்
வளாகத்தில் நடந்த மாநாட்டிற்கு மாநில
தலைவர் டாக்டர்
அரசு ராஜா தலைமை தாங்கினார்.
தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட
துணை தலைவர்கள் சுந்தரவேல்,
பொன்.பரமேஸ்வரன், மாவட்ட
செயற்குழு உறுப்பினர்கள் சின்னத்துரை,
சுடலைமுத்து, பொன்கந்தசாமி,
தெற்கு ஒன்றிய தலைவர் சுயம்பு, ஒன்றிய
தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர்கள்
பாலகிருஷ்ணன், பொன்பாண்டி, ஒன்றிய
செயற்குழு உறுப்பினர் மலையாண்டி, நகர
தலைவர் சரவண மயில் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். மாநாட்டில் மாநில
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
ராமகோபாலன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது:–
இந்திய எல்லையில் சீனா வாலாட்டுகிறது.
ஆனால் நமது பிரதமர் கண்டனம் மட்டும்
செய்கிறார்.
அதனை சீனா கண்டுகொள்ளவில்லை.
அதனை நம்மால் தடுக்க முடியும். அந்த
தடுக்கும் சக்தி தான் நரேந்திரமோடி. இவர்
நாட்டில் பிரதமராக வரத்தான் போகிறார்.
மோடி போன்ற இரும்பு மனிதர் பிரதமராக
வரவேண்டும், நாட்டை காப்பாற்ற வேண்டும்
என மக்கள் விரும்புகிறார்கள்.
இன்று கடவுளே கிடையாது என்பவர்கள்
திருப்பதி, பழனி கோவில்களில்
திருட்டுத்தனமாக
சாமி கும்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.
நமக்கு மிகப்பெரிய எதிரி தீண்டாமை,
சாதி சண்டை தான். இதனை ஒடுக்க நாம்
ஒன்றுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் மாநில தலைவர் டாக்டர்
அரசுராஜா, மாநில துணை தலைவர்
வி.பி.ஜெயக்குமார், மாவட்ட பொதுச்
செயலாளர் சக்திவேல் உள்பட பலர் பேசினர்.
முன்னதாக புளியடி மாரியம்மன் கோவிலில்
இருந்து இந்து முன்னணியினர் ஊர்வலமாக
வந்தனர். ஊர்வலத்தை மாநில
துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார்
கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் சென்றவர்கள் இந்து மாணவ–
மாணவிகளுக்கும்
கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என
கோஷம் எழுப்பினர்.