News Update :
Powered by Blogger.

சகுனியில் ராகுலை விமர்சிக்கவில்லை: நடிகர் கார்த்தி

Penulis : karthik on Monday, 2 July 2012 | 22:56

Monday, 2 July 2012

'சகுனி' படத்தில் ராகுல் காந்தியை விமர்சித்து இருப்பதாக காங்கிரசார் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கார்த்தி, சந்தானம் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்து உள்ளனர்.ஈரோட்டில் 'சகுனி' படம் திரையிடப்பட்டுள்ள அபிராமி தியேட்டரில் ரசிகர்களை சந்திக்க வந்த கார்த்தியிடம் காங்கிரசார் எதிர்ப்பு பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து கார்த்தி கூறியத ாவது:-சகுனி படத்தில் அரசியல் உள்ளது. ஆனால் நான் அரசியல்வாதி கிடையாது. அந்த எண்ணமும் எனக்கு இல்லை. சகுனி படத்தில் ராகுல் காந்தியை நாங்கள் விமர்சிக்கவில்லை. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு கிடையாது.ராகுல் காந்தியின் குடும்பத்துக்கு நல்ல மரியாதை இருக்கிறது. கதைபடி அரசியல்வாதியாக நடித்துள்ளேன். அவ்வளவு தான். திருட்டு வி.சி.டியால் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்� ��ர் உரிமையாளர் களுக்கும் நஷ்டம் ஏற்படு கிறது. இப்போதும் 100 சதவீதம் திருட்டு வி.சி.டி. உள்ளது.தியேட்டருக்கு வந்து மக்கள் படம் பார்க்க ஆசைபடுகிறார்கள். ஆனால் ரூ.20-க்கு சுலபமாக திருட்டு வி.சி.டி கிடைத்தால் என்ன செய்வார்கள்? இதனை தடுக்க கடுமையான சட்ட திட்டங்களை அமல்படுத்த வேண்டும். திருட்டு வி.சி.டி. என்பது அடுத்தவன் சொத்தை அபகரிப்பதற்கு சமம். நடிகர்களுக்கு தகுதியை மீறிய சம்பளம் யாரும் தருவதில்லை.சகுனி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுத்தை படத்தின் ஒட்டு மொத்த வசூலை சகுனி படம் 3 நாளில் முறியடித்து விட்டது. எனது படத்தை குழந்தைகள், பெண்கள் விரும்பி பார்க்கிறார்கள். இந்த படத்துக்கு இன்னும் அதிகமாக பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.தற்போது நான் 'அலெக்ஸ் பாண்டியன்', 'பிரியாணி', 'ஆல் இன் ஆல் அழகுரா� ��ா' போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறேன். கமர்சியல் படத்தையும் தாண்டி பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் மாதிரியான கதைகள் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.சூர்யாவுக்கு நான் எந்த விதத்திலும் போட்டி கிடையாது. அவர் பாணியும், என் பாணியும் வேறு வேறு.இவ்வாறு கார்த்தி கூறினார்.

comments | | Read More...

திரிணாமுல் கட்சியின் நிலைகுறித்து ஜனாதிபதி தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும்: மம்தா

கொல்கத்தாவில் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில்  ஜனாதிபதி தேர்தலில் தங்களது நிலைகுறித்து ஆலோசனை கூட்டம் கட்சியின்  எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கல் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு, ஜனாதிபதி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ்  கலந்துகொள்ளுமா? என மம்தா பான ர்ஜியிடம் கேட்டபோது, இருக்கலாம். ஆனால்,  ஜனாதிபதி தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தலில் தங்களின்  நிலை என்ன  என்பது குறித்து  முடிவெடுக்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.,வரும் ஜூலை  19 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க  தனது கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை  கொல்கத்தாவில் இருக்குமாறு மம்தா பானர� ��ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.திரிணாமுல் கட்சி நூற்றுக்குநூறு ஒழுங்கும் கட்டுப்பாடும் நிறைந்த கட்சி எனவும் ஒரு சிலர் குறை கூறுவது குறித்து கவலை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.  திரிணாமுல் கட்சியின் எம்.பி.சோமன்  மித்ராவும்  அவரது மனைவியும்  அக்கட்சியின் எம்.எல்.ஏ.யுமான சிக்ஹா மித்ரா இருவரும் தனது கட்சியின் தலைமை குறித்து முரண்பாடான கருத்துக்களை கூறிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

comments | | Read More...

தமிழக மீனவர்கள் பத்து பேர் சிறை பிடிப்பு: இலங்கை இராணுவம் அட்டூழியம்

ராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு 5 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கரை திரும்பாததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர்.இதனையடுத்து அவர்களை தேடி மற்றொரு விசைப்படகில் 5 மீனவர்கள் நேற்று மீன்துறை அனுமதி பெற்று கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் முதலில் சென்ற 5 மீனவர்களுடைய படகு பழுதானதால் நடுக்கடலில் தவித்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற ்படையினர் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.இதனிடையே இவர்களை தேடிச்சென்ற 5 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றுவிட்டனர். பிறகு அவர்களுடைய படகுகளை கைபற்றியதுடன் அவர்களை தலைமன்னார் சிறையில் அடைத்துள்ளனர்.இந்த 10 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் இன்று இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே தனுஷ்க ொடியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களையும் கடத்தல் காரர்கள் என்றும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தற்போது மொத்தம் 13 பேர் இலங்கை கடற்படை வசம் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger