News Update :
Home » » தமிழக மீனவர்கள் பத்து பேர் சிறை பிடிப்பு: இலங்கை இராணுவம் அட்டூழியம்

தமிழக மீனவர்கள் பத்து பேர் சிறை பிடிப்பு: இலங்கை இராணுவம் அட்டூழியம்

Penulis : karthik on Monday, 2 July 2012 | 20:17

ராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு 5 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கரை திரும்பாததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர்.இதனையடுத்து அவர்களை தேடி மற்றொரு விசைப்படகில் 5 மீனவர்கள் நேற்று மீன்துறை அனுமதி பெற்று கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் முதலில் சென்ற 5 மீனவர்களுடைய படகு பழுதானதால் நடுக்கடலில் தவித்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற ்படையினர் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.இதனிடையே இவர்களை தேடிச்சென்ற 5 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றுவிட்டனர். பிறகு அவர்களுடைய படகுகளை கைபற்றியதுடன் அவர்களை தலைமன்னார் சிறையில் அடைத்துள்ளனர்.இந்த 10 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் இன்று இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே தனுஷ்க ொடியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களையும் கடத்தல் காரர்கள் என்றும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தற்போது மொத்தம் 13 பேர் இலங்கை கடற்படை வசம் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger