News Update :
Powered by Blogger.

எம்.பி. பதவி கொடுத்ததற்கு பதில் தெண்டுல்கருக்கு பாரத ரத்னாவிருது கொடுத்து இருக்கலாம்: அன்னாஹசாரே

Penulis : karthik on Wednesday, 2 May 2012 | 23:48

Wednesday, 2 May 2012



 பிரபல காந்தியவாதி அன்னாஹசாரே ஊழலை ஒழிக்க வலுவான லோக் ஆயுக்தா சட்டம் தேவை என்று வலியுறுத்தி வருகிறார். மக்களிடம் லோக் ஆயுக்தா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் மராட்டிய மாநிலத� ��தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அந்த பயணத்துக்கிடையே அவுரங்கா பாத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- 

தெண்டுல்கருக்கு மேல்- சபை எம்.பி. பதவி கொடுத்திருப்பதாக தகவல் வெளியானதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மத்திய அரசில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

தெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் நம்ப முடியாத அளவுக்கு சாதனைகள் படைத்தவர். அவரை உரிய முறையில் கவுரவப்படுத்த வேண்டும். பாராளுமன்ற மேல்- சபை எம்.பி. பதவி அவருக்கு தேவை இல்லை. 

தெண்டுல்கருக்கு எம்.பி. பதவி கொடுத்ததற்கு பதில் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவித்து இருக்கலாம். அதுதான் பொருத்தமானதாக இருக்கும். தெண்டுல்கருக்கு மேல்- சபை எம்.பி. பதவி கொடுத்துள்ளதாக அறிவிப்பு வெளியான போது நான் எந்த அளவுக்கு கு� ��ப்பம் அடைந்தேனோ, அதே மாதிரி ஏராளமானவர்கள் குழம்பி போனார்கள். பதவி கொடுப்பதை விட விருது கொடுப்பதுதான் தெண்டுல்கருக்கு பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.

இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.



comments | | Read More...

புதுக்கோட்டை இடைத் தேர்தல்: திமுக புறக்கணிப்பு- கருணாநிதி அறிவிப்பு




புதுக்கோட்டை இடைத் தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துக்குமரன் சாலை விபத்தில் பலியானதைத் தொடர்ந்து அங்கு ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இம்முறை போட்டியிடவில்லை. பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அ� �ிவித்திருந்தது.

அதிமுக மட்டுமே போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளராக கார்த்திக் தொண்டமானையும் களமிறக்கி அமைச்சர்கள் படை கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்று சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் கேட்டதற்கு, மே 17-ந் தேதிதான் திமுக நிலை அறிவிக்கப்படும் என்� �ு கூறியிருந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார். இடைத்தேர்தல் தேதியை தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் தீர்மானித்திருப்பதால் யார் போட்டியிட்டாலும் தோற்பது உறுதி என்ற நிலையில் திமுக தேர்த லை புறக்கணிப்பதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களையும் அதிமுக புறக்கணித்திருந்தது. அண்மையில் நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக டெபாசிட்டையே பறிகொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

ஜீவா நடித்த 'கோ' படத்துக்கு விருது




கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா, பியா, கோட்டா சீனிவாசராவ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்து கடந்தாண்டு வெளியாடன சூப்பர் ஹிட் படம் 'கோ'. பத்திரிகை துறையில் இருக்கும் ஒருவர் நினைத்தால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.

விஜயா புரடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நாகிரெட்டி அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்ற ஆண்டிற்க� �ன விருதுகளில் 'கோ' சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படப்பிரிவில் 'கோ' தேர்வு செய்யப்பட்டு நாகிரெட்ட� � விருது வழங்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார், ஜெயராமன் ஆகியோர் ரூ. 1 1/2 லட்சம் காசோலை பெற்றனர்.

நிகழ்ச்சியில் இயக்குனர் கே.வி.ஆனந்த், கவிஞர் வைரமுத்து பட அதிபர் ஏ.வி.எம்.சரவணன், நடிகர் பிரபு, நடிகை நதியா, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், வெங்கட்ராமரெட்டி, பாரதி ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger