News Update :
Powered by Blogger.

அயோத்தி ராமர் கோவிலை தகர்ப்போம்: நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்

Penulis : karthik on Wednesday, 18 April 2012 | 05:11

Wednesday, 18 April 2012




ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக பைசாபாத் மாவட்ட நீதிபதி ராமவிரகாஷ் யாதவுக்கு மிரட்டல் கடிதம் வந்� �ுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் உள்ளது. நீதிமன்ற வழக்கு காரணமாக அந்த கோவிலுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ராமர் கோவிலையும், மாவட்ட நீதிமன்றத்தையும் வெடிகுண்டு வைத்து தகர்த்தப் போவதாக பைசாபாத் மாவட்ட நீதிபதி ராம்விரகாஷ் யாதவுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.

அந்த கடித்தத்தில் ராமஜென்ம பூமி வளாகத்தையும், மாவட்ட நீதிமன்றத்தையும் குண்டு வைத்து தகர்க்கப்போவதாக யாரோ கையால் எழுதி சாதாரண தபாலில் அனுப்பியுள்ளனர். நீதிபதி யாதவ் அந்த கடித்தத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து ராமர் கோவிலுக்கும், மாவட்ட நீதிமன்றத்திற்கும் பாதுகாப்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது குறித்து பைசாபாத் டி.ஐ.ஜி. பானுபாஸ்கர் கூறுகையில்,

ராமர் கோவிலைத் தகர்க்கப்போவதாக அடிக்கடி மிரட்டல் கடிதங்கள் வருகின்றன. இதுவரை வந்துள்ள எந்த ஒரு கடிதத்தையும் நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது வந்துள்ள மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம்.

கடந்த மாதம் ராமநவமியின்போது ரயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் கடிதம் வந்தது. இந்த 2 கடிதகங்களையும் எழுதியது ஒரு நபரா என்று அவற்றை ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகிறோம். முதலில் வந்த கடிதத்தில் அப்துல் கரீம் என்ற பெயர் இருந்தது. � �து மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் இருந்து வந்தது. அந்த கடிதத்தை எழுதிய உண்மையான நபர் இன்னும் சிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.



comments | | Read More...

நகை கடையில் பரபரப்பான 12 நிமிடங்கள்: கொலையாளியின் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டன




சென்னை நெற்குன்றத்தில் வசித்து வந்த நகை கடை அதிபர் கணேஷ்ராம் கடந்த 14-ந்தேதி அவரது கடையில் வைத்தே கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணேஷ்ராம் கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பெண்ணிடம் கடந்த 4 நாட்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் இதில் முன்னேற்றம் ஏற்பட்டது போல தெரிந்தது. அவர் கூறிய தக� �ல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் கணேஷ்ராம் கொலையில் எதிர்பார்த்த அளவுக்கு துப்பு துலங்க வில்லை.

காதல் தகராறு காரணமாக கொலை நடந்ததா? 1 கிலோ நகை பிரச்சினையில் கணேஷ்ராம் கொல்லப்பட்டாரா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் கொலையாளி யார்? கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது தெரியாமலேயே உள்ளது.

கணேஷ்ராமின் கடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் சிக்கிய வாலிபர்தான் கொலையாளி என்பதை உறுதி செய்துள்ள போலீசார் அந்த வாலிபர் யார்? என்பது பற்றி தீவிரமாக துப்பு துலக� ��கி வருகிறார்கள். வாலிபரின் போட்டோ தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டோவை பழைய குற்றவாளிகளின் போட்டோவுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளி பற்றி தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்வதற்காக செல்போன் எண்களும் வெளியிடப்பட்டன. ஆனால் வாலிபர் பற்றி யாரும் துப்பு கொடுக்கவில்லை. இதனால் கொலையாளியை கண்டு பிடிப்பதில் பின்னடைவு எற்பட்டுள்ளது.

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படை போலீசார் முகாமிட்டு கொலையாளி பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள். கணேஷ்ராம் கொலை செய்யப்பட்ட அன்றே கொலையாளியின் போட்டோக்களை போலீசார் வெளியிட்டனர். ஆனால் அதில் துப்பு துலங்காததால், இன்று கொலையாளியின் வீடியோ படங்களை வெளியிட்டுள்ளனர்.

கணேஷ்ராமை கொலை செய்ய தயாராகும் கொலையாளி கடைக்குள் நுழைவது முதல்... கணேஷ் ராம் கொலையுண்டு கிடந்த லாக்கர் அறைவரை அவனது நடமாட்டம் அதில் பதிவாகி உள்ளது. ஆனால் கணேஷ்ராம் கொலை செய்யப்படும் காட்சி அதில் இடம் பெறவில்லை. லாக்கர் அறையின் வாசல் வரைதான் கேமராவின் பார்� ��ைபட்டுள்ளது.



comments | | Read More...

ரஜினியை ஏன் இதில் தொடர்புபடுத்துகிறீர்கள்... எதையும் நானே பேஸ் பண்ணுவேன்! - தனுஷ்




3 பட வெளியீடு மற்றும் வர்த்தகத்தில் ரஜினிக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத நிலையில், அவர் பெயரை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிடுவது எந்த வகையிலும் நியாயமற்றது, ஏற்க முடியாதது, என்றார் நடிகர் தனுஷ்.

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், தனுஷ் - ஐஸ்வர்யா நடித்த 3 படத்தை தெலுங்கில் வெளியிட்டதால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு, அதன் வெளியீட்டாளர் நட்டி குமாருக்கு ரஜினி நஷ்ட ஈடு தருவார் என செய்தி வெளியானது.

இதற்கு உடனடியாக தன் கைப்பட எழுதிய அறிக்கையில் மறுப்பு தெரிவித்திருந்தார் ரஜினி.

இந்த நிலையில், படத்தின் ஹீரோ தனுஷும் தன் பங்குக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ரஜினி மகளை திருமணம் செய்துவிட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக, � �ட்டுக்கட்டி வரும் செய்திகளை எப்படிப் பொறுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. 3 படத்தால் யாருக்கும் நஷ்டமில்லை. அப்படி நஷ்டமென்று யாரும் சொல்லிவில்லை. அப்படியே நஷ்டம் வந்தாலும் அதை ஈடு செய்யும் வலிமையை கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார். என் குடும்ப பிரச்சினையை நானே பார்த்துக் கொள்வேன். ரஜினியை இந்தப் படத்தோடு ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும்," என்றார்.

இப்போது 3 படத்தை இந்தியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார் தனுஷ். ஆனால் படத்தின் இரண்டாம் பாதியை, கமல் சொன்ன அட்வைஸ்படி ஷார்ப்பாக எடிட் பண்ணி வெளியிடுகிறாராம்.

இதுகுறித்துக் கூறுகையில், "கமல் சொன்ன சில யோசனைகளின்படி இரண்டாம் பாதியை எடிட் செய்து வருகிறேன். இந்தியில் நிச்சயம் நான் நினைத்தபடி இந்தப் படம் போகும்," என்றார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger