News Update :
Powered by Blogger.

தபால் நிலையங்களில் சோலார் விளக்குகள் விற்பனை: தமிழகம் முழுவதும் விரைவில் கிடைக்கும்

Penulis : karthik on Friday, 13 April 2012 | 23:54

Friday, 13 April 2012




தபால் பரிமாற்ற சேவை, � ��ணப் பரிமாற்றம் மற்றும் சிறு சேமிப்பு உள்ளிட்ட சேவைகளை அளித்து வந்த தபால்துறை பொதுமக்களின் நலனைக் கருதியும், வருவாயை பெருக்கவும் மேலும் சில அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகிறது. தபால் நிலையங்களில் ஏற்கனவே தங்க நாணயம் விற்பனை, ரெயில் டிக்கெட் முன்பதிவு, மின்கட்டணம் செலுத்தும் வசதி, கைக்கடிகார விற்பனை, மினி குளிர் சாதனப்பெட்டி விற்பனை ஆகியவை நடந்து வருகிறது.

தபால்துறை தற்போது பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக பயன்படக்கூடிய நவீன சோலார் விளக்குகள் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நாள் முழுவதும் சூரிய ஒளியில் சார்ஜ் செய்து இரவ� �� முழுவதும் இந்த விளக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார் நிறுவனத்துடன் கூட்டாக இந்த திட்டத்தை தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 3 வகையான சோலார் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் டி.லைட் எஸ் 250 என்ற மாடல் விலை ரூ.1,699 ஆகும். இது சி.எல்.எப். பல்புகளை காட்டிலும் அதிக வெளிச்சம் கொண் டது. 50 ஆயிரம் மணி நேரம் எரியும். 12 மாதம் உத்தரவாதம் உள்ளது. இதில் செல்போனையும் 1.3 வாட் திறன் கொண்ட சோலார் தகடையும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். டி.லைட் எஸ் 10 மாடல� � விளக்கு ரூ.549 ஆகும். இது உறுதியான பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது எளிதில் உடையாது. டி.லைட் எஸ் 1 மாடல் விளக்கின் விலை ரூ.399 ஆகும். இதற்கு 6 மாதம் உத்தரவாதம் உள்ளது. இந்த சோலார் விளக்கு கள் தற்போது வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தலைமை தபால் நிலையங்கள், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், திருப்போரூர் கருங்குழி, உத்திரமேரூர், பெரிய காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, லத்தேரி, ஒடுகத்தூர், அணை� ��்கட்டு, கனியம்பாடி, சத்துவாச்சாரி ஆகிய துணை தபால் நிலையங்கள் என 19 தபால் நிலையங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய தபால் நிலையங்க ளிலும் இத்திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கான முயற்சியை தபால் துறை எடுத்து வருகிறது. இந்த தகவலை சென்னை தலைமை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



comments | | Read More...

தமிழ் ஈழத்துக்காக பொதுவாக்கெடுப்பு நடத்துங்கள் - ஐநாவுக்கு வைகோ கோரிக்கை




தமிழீழம் அமைய ஐ.நா.சபை சார்பில் பொது வாக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினா� ��்.

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்' நூல் வெளியீட்டு விழா தியாகராய நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நூலினை வெளியிட, தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் மு.பாலசுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார்.

விழாவில் வைகோ பேசுகையில், "இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுதங்களை வழங்கியது. இந்த வஞ்சக சூழ்ச்சியால்தான் விடுதலைப் புலிகள் போரில் தோற்றனர்.

இப்போது இலங்கையின் கிழக்கு மாகாணங்களில் சிங்களர்கள் குடியேற்றம் விரைவாக நடைபெறுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்களைக் கொன்று விட்டதாக இலங்கை அரசு கருதலாம். ஆனால் ஈழத் தமிழர்கள் பின்னால் 7 கோடி தமிழர்கள் இருக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கைப் பிரச்னைக்கு தமிழீழம் ஒன்றுதான் தீர்வாக இருக்க முடியும். ஐ.நா.சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி பொது வாக்கெடுப்பு எடுத்து தமிழீழம் அமைக்காவிட்டால் மீண்டும் விடுதலைப் புலிகள் ஆயுதம் தாங்கிப் போராடுவார்கள்.

பொது வாக்கெடுப்பா, ஆயுதமா என்பதை வரலாறே தீர்மானிக்க முடியும். ஆயுதம் தாங்கிப் போராடுவதைத் தவறு என்று யாரும் சொல்ல முடியாது. தவறு என்றால் எல்லா நாடுகளும் தங்கள் ஆயுதங் களை பசிபிக் கடலில்தான் கொட்ட வேண்டும். எந்த நாடாவது அப்படிச் செய்ய முன் வருமா?

பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஆயுதம் வாங்குவதற்குத்தான் எல்லா நாடுகளும் நிதி அதிகம் ஒதுக்குதின்றன என்பதை மறந்து விடக் கூடாது. எனவே ஆயுதம் எடுப்பதில் தவறு இல்லை.

பழ.நெடுமாறன் எழுதியுள்ள இந்த நூல் ஈழத் தமிழர்களின் அடுத்த கட்டத்துக்கான ஆயுத சாலையாகப் பயன்படும்," என்றார் வைகோ.

பழ.நெடுமாறன் பேசுகையில், "பிரபாகரன் புகழ் பாடுவதற்காக இந்த நூலை எழுதவில்லை. அதை அவர் விரும்பவும் மாட்டார். ஈழத் தமிழர்களின் தியாகத்தையும் வீரத்தையும் இளைய தலைமுறை தெர ிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் எழுதியுள்ளேன். பிரிட்டிஷார் ஆட்சியில் தமிழர்கள் கூலிகளாகத்தான் பார்க்கப்பட்டனர்.

இந்தப் பார்வை சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தது. விடுதலைப் புலிகளுடைய எழுச்சிக்குப் பின்னரே இந்தப் பார்வை மாறியது.

வீரம் நிறைந்தவர்களாக இப்போது தமிழர்கள் பார்க்கப்படுகின்றனர்," என்றார் அவர்.

விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, தமிழ்த் தேசிய பொதுவுடைமை கட்சித் தலைவர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்பட பலர் பேசினர்.

விழாவில் பழ.நெடுமாறனுக்கு ம.தி.மு.க. சார்பில் தங்கப் பேனா பரிசளிக்கப்பட்டது.



comments | | Read More...

இலங்கை அருகே புதிய புவிதட்டு உருவாகிறது!




இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடபகுதியின் மேற்கு கரையில் நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக� �டர் அளவில் 8.9 என்ற அளவில் அது பதிவானது.

இதனால் இந்தியா, உள்ளிட்ட பல நாடுகளில் பூமி குலுங்கியது. இதனால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தினால் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணியளவில் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டது.

கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பேரலைகள் உருவாகி ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகினர்.

   
ஆனால் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது புவி சிறு தட்டுகளில் அதிர்வு ஏற்பட்டது. இருந்த போதும் சுனாமி பேரலைகள் தோன்றவி� ��்லை. இதற்கு புவிதட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதே காரணம் என இங்கிலாந்து புவியியல் நிபுணர் ரொகர் மியூசன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட பெரும்பாலான நில நடுக்கங்களால் நிலைமை மாற்றம் அடைந்துள்ளது. இதனால்தான் சுனாமி ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

புவி 12 தட்டுகளால் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது புதிதாக 13-வது புவிதட்டு ஒன்று உருவாகி வருவதாக இலங்கையின் சிங்கள புவியியல் துறை பேராசிரியர் கபில தஹாநாயக்க தெரிவித்துள்ளார். இது இலங்கை அருகே உருவாகி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா- ஆஸ்திரேலியாவின் புவித்தட்டில் இலங்கை உள்ளது. அதே நேரத்தில் உலகில் அதிக நிலநடுக்கம் உருவாகின்ற ஜப்பான் பசிபிக் புவிதட்டின் மீது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger