News Update :
Powered by Blogger.

ஆந்திராவில் தோப்புக்கரணம் தண்டனைக்கு மாணவன் பலி

Penulis : karthik on Friday, 14 September 2012 | 01:28

Friday, 14 September 2012

ஆந்திராவில் தோப்புக்கரணம் தண்டனைக்கு மாணவன் பலி: பள்ளிக்கூடம் சூறை ஆந்திராவில் தோப்புக்கரணம் தண்டனைக்கு மாணவன் பலி: பள்ளிக்கூடம் சூறை
ஆந்திராவில் தோப்புக்கரணம் தண்டனைக்கு மாணவன் பலி: பள்ளிக்கூடம் சூறை

நகரி, செப். 14- ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் ராயல் எம்பஸ்வி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முகம்மது சித்திக் ஹ§சைன் என்பவரின் மகன் முகம்மது இஸ்மாயில், 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் ஏற்கனவே ஒரு விபத்தில் சிக்கி கால் முறிவு ஏற்பட்டவன். இவனது மூட்டில் அறுவை சிகிச்சை செய்து பிளேட் பொருத்தப்பட்டு இருந்தது. கடந்த 4-ந்தேதி வகுப் பறையில் இஸ்டாயில் குறும் புத்தனம் செய்துள்ளான். வகுப்பு ஆசிரியையான மதினாபேகம் அவனுக்கு 100 முறை தோப்புக்கர்ணம் போடுமாறு தண்டனை அளித்துள்ளார். 40 தோப்புக்கரணம் போட்ட நிலையில் அவன் வகுப்பிலேயே மயங்கி விழுந்தான. இதையடுத்து அவன் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவன் நேற்று இறந்தான். தோப்புக்கரணம் போடச்சொல்லி தண்டனை கொடுத்ததால், கால் மூட்டில் பொருத்தப்பட்டிருந்த பிளேட் உடைந்து, செப்டிக் ஆனதால், மாணவன் இஸ்மாயில் இறந்ததாக அவனது பெற்றோர் குற்றம்சாட்டினார். பின்னர் பெற்றோரும், உறவினர்களும் திரண்டு சென்று பள்ளிக்கூடத்தை சூறையாடினர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சதானாம் செய்து அனுப்பி வைத்தனர்.  இதுபற்றி துணை போலீஸ் கமிஷனர் அகுன்அகர்வால் கூறியதாவது:- மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், வகுப்பு ஆசிரியை மதினாபேகம் மீது 304-ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவனின் மரணத்துக் கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே தெரியவரும். உடல் ரீதியிலான தண்டனை காரணமாக மாணவன் இறந்ததாக தெரியவந்தால், ஆசிரியை கைது செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல குண்டூர் மாவட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் 2 மாணவர்கள் தலைமை ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மாணவர்கள் 2 பேர் சீருடை அணியாமல் பள்ளிக்கு வந்தனர். அவர்களை தனது அறைக்கு அழைத்த தலைமை ஆசிரியர், மின்சார ஒயரால் அவர்களை அடித்துள்ளார். இதில் உடலில் காயம் ஏற்பட்ட அந்த மாணவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். 
comments | | Read More...

உலக அழகி யுக்தா முகி புகார்

கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார் கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்
கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்



முன்னாள் உலக அழகியும், நடிகையுமான யுக்தா முகி தனது கணவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.கடந்த 1999ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் யுக்தா முகி. அதன் பிறகு அவர் சில இந்தி படங்களில் நடித்தார்.

தமி்ழில் அஜீத் குமார், ஜோதிகா நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் யுக்தா முகி, யுக்தா முகி என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். பின்னர் பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பிரின்ஸ் டுலியை கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி மணந்தார். அதன் பிறகு திரையுலகில் இருந்து தள்ளியே இருக்கிறார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் யுக்தா முகி தனது கணவர் மீது போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில், பிரின்ஸ் டுலி தன்னை அவ்வப்போது அடித்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அவரது புகாரின்பேரில் டுலி மீது தண்டிக்க இயலாத குற்றத்தின் கீழ் அம்போலி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தால் நீதிமன்ற உத்தரவின்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவோ, கைது செய்யவோ முடியாது.முன்னாள் உலக அழகியான யுக்தா முகி தனது கணவர் மீது புகார் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
comments | | Read More...

டீசல் விலை உயர்வு: ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்ந்தது

டீசல் விலை உயர்வு: ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்ந்தது டீசல் விலை உயர்வு: ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்ந்தது
டீசல் விலை உயர்வு: ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்ந்தது

சென்னை, செப். 14-

டீசல் விலையை மத்திய அரசு வரலாறு காணாத வகையில் உயர்த்தியுள்ளது. இதுவரை ரூ.43.91க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் விலை தற்போது ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.48.91க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உயர்த்தப்பட்ட டீசல் விலையில் தமிழக அரசு விற்பனை வரியாக ரூ.1.20 வசூலிக்கிறது. இவற்றுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.6.20 விலை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வால் அத்யாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.

டீசல் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தவுடன் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உடனடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது. 2 கிலோமீட்டர் அல்லது 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்தால் ரூ.60 வரை செலுத்த வேண்டியது உள்ளது.

சென்னையில் 70 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றில் 10 ஆயிரம் ஆட்டோக்கள் டீசலில் ஓடக்கூடியவை. மீதமுள்ள ஆட்டோக்கள் பெட்ரோலில் ஓடக்கூடியது. பெட்ரோல் விலை உயர்வு செய்யாத நிலையில் கூட பெட்ரோல் ஆட்டோ டிரைவர்களும் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். சென்னையில் மாநகர பஸ் போக்குவரத்து இல்லாத இடங்களில் ஷேர் ஆட்டோ என்ற பெயரில் பெரிய அளவிலான ஆட்டோக்கள் அதிகளவு ஓடுகின்றன.

மாநகர பஸ்களின் வருவாயை தடுக்கக்கூடிய இந்த ஆட்டோக்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புற்றீசல் போல் ஓடுகின்றன. இந்த வகை ஆட்டோக்களை சென்னை வாசிகள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பஸ்சுக்காக காத்து நிற்பதற்குள் அடுத்தடுத்து வரும் இந்தவகை ஆட்டோக்களில் ஏறி பயணம் செய்வதையே பெரிதும் விரும்புகிறார்கள். இந்த ஷேர் ஆட்டோக்களில் ஒருவர் பயணம் செய்ய குறைந்த பட்சம் ரூ.10 ஆக இருந்தது. டீசல் விலை உயர்வுக்கு பிறகு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதிகபட்சமாக ரூ.10 முதல் ரூ.20 வரை ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது அன்றாட போக்குவரத்து செலவிற்காக கூடுதல் தொகை செலவிட நேரிடுகிறது. இந்த திடீர் கூடுதல் செலவு சாதாரண, நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய பெண்கள், இளைஞர்கள் ஷேர் ஆட்டோக்களை அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த திடீர் கட்டண உயர்வு தங்களுக்கு கூடுதல் செலவினமாகும் என்று மனம் குமுறுகிறார்கள். டீசல் விலை உயர்ந்தவுடன் ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்த தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் முடிவு செய்துள்ளனர். ரூ.20 முதல் ரூ.30 வரை கட்டண உயர்த்தபடும் என்று கே.பி.என் பஸ் நிர்வாக இயக்குனர் கே.பி.நடராஜன் தெரிவித்தார் அவர் மேலும் கூறியதாவது:-

ஏற்கனவே மோட்டார் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. இத்தொழிலில் ஈடுபட்ட பலர் தொடர்ந்து செய்யமுடியாமல் வெளியேறி விட்டனர். மத்திய அரசு அடிக்கடி டீசல் விலையை உயர்த்தி வருவதால் பஸ் கட்டணத்தையும் நாங்கள் உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். இந்த சுமை பொதுமக்கள் தலையில்தான் விழுகிறது. மாநில அரசு வரி, டோல்கேட் கட்டணம் அதிகம் வசூலிப்பதால் இத்தொழிலில் லாபகரமாக நடத்த முடியவில்லை. தற்போது டீசல் விலையை உயர்த்தியதன் விளைவாக ஆம்னி பஸ்கள் கட்டணம் குறைந்தது ரூ.20 முதல் ரூ.30 வரை உயர வாய்ப்பு உள்ளது. 31 இருக்கைகள் கொண்ட ஆம்னி பஸ்களில் 20 இருக்கைகளை மட்டுமே கணக்கிட்டு கட்டணம் உயர்த்தினால் வண்டிகளை இயக்க முடியும்.

டீசல் விலை உயர்வால் எனது நிறுவனத்தில் மட்டும் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் கூடுதலாக செலவாகிறது. ஆன்-லைன் மூலம் புக்கிங் வசதி எங்கள் நிறுவனத்தில் இருப்பதால் கட்டண உயர்வை கணக்கிட்டு அவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய ஓரிரு நாட்கள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger