News Update :
Powered by Blogger.

இடிந்தகரை பஞ்சாயத்து தலைவியின் கணவரை வழிமறித்து தாக்குதல்: கொல்ல முயன்றதாக உதயகுமார் உள்பட 10 பேர் மீது புகார்

Penulis : karthik on Sunday, 15 April 2012 | 01:50

Sunday, 15 April 2012



width="200"


 
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து மின் உற்பத்தியை தொடங்குவதற்கான பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன.
 
கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட ஒப்புதல் வழங்கிய அதே நேரத்தில், கூடங்குளம் உள்ளிட்ட கடலோர கி� �ாமங்களில் ரூ.500 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
 
இதனை கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் வரவேற்கவில்லை. இருந்த போதிலும் ரூ.500 கோடி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளவுள்ள பஞ்சாயத்து தலைவர்களுடன் நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் ஆலோசனை நடத்தினார்.
 
அப்போது அரச ிடமிருந்து 500 கோடி நிதி பெற பஞ்சாயத்து கூட்டங்கள் நடத்தி தீர்மானம் நிறைவேற்றுமாறும் கூறினார். அதன்படி கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக உள்ள பஞ்சாயத்துகளில் கூட்டம் நடத்தப்பட்டது.
 
அவ்வாறு கூட்டம் நடத்திய பஞ்சாயத்துக்களில் ஒன்று இடிந்தகரை. இந்த பஞ்சாயத்தின் தலைவி சகாய பெக்ளின் எஜிடின், கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியதால், அணுஉலை எதிர்ப்பாளர� ��களுக்கு அவர் மீது ஆத்திரம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இடிந்தகரை பஞ்சாயத்து தலைவி சகாய பெக்ளின் எஜிடின், அவரது கணவர் சகாயராஜ், சகாயராஜின் அண்ணன் ஸ்டாலின், தினேஷ் ஆகியோர் நேற்று இரவு காரில் இடிந்தகரை பகுதியில் வந்தனர்.
 
அப்போது அவர்களது காரை 10-க்கும் மேற்பட்டோர் அடங்கிய ஒரு கும்பல் வழிமறித்தது. டிரைவர் காரை நிறுத்திய தும், அந்த கும்பலை சேர்ந்தவர்கள், பஞ்சாயத்து தலைவி உள்ளிட்டோரிடம் தகராறு செய்தனர். அப்போது அவர்கள் பஞ்சாயத்து தலைவியின் கணவர் சகாயராஜ், ஸ்டாலின் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.
 
இதில் காயமடைந்த அவர்கள் 2 பேருக்கும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக அவர்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், மைபா ஜேசுராஜன், ஜெயகுமார் உள்பட 10 பேர் மீது கூடங்குளம் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






http://devadiyal.blogspot.com


comments | | Read More...

தீவிரவாதி என்று நினைத்து ஷாருக்கான் அவமதிப்பு: அமெரிக்கா விளக்கம்



width="200"

  
 
அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் விடுத்த அழைப்பை ஏற்று அப்பல்கலைக்கழக விழாவில் கலந்துகொள்ள இந்தி நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா சென்றார்.
 
நியூயார்க் விமான நிலையத்தில் ஷாருக்கானை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி 2 மணி நேரம் விசாரணை நடத்தினர ். உள்துறை அமைச்சகம், சுங்கத்துறை, குடியுரிமை அதிகாரிகளை யேல் பல்கலைக்கழக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசிய பிறகே, ஷாருக்கான் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்.  
 
இந்த செயலுக்கு இந்தியாவும், ஷாருக்கான் ரசிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட விமான நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறு த்தியது.
 
இதற்கு அமெரிக்கா விளக்கம் அளித்தது. விமான நிலையத்தில் நடிகர் ஷாருக்கானிடம் இனப்பாகுபாடோ அல்லது வேறுவிதமான பாகுபாடோ காட்டப்படவில்லை. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை.
 
இவரைப்போன்ற முக்கியஸ்தர்கள், முன் கூட்டியே தங்களது அந்தஸ்து, பயண திட்டம் போன்ற விவரங்களை டெல்லியில் உள்ள எங்களது தூதரகத்தில் தெரிவ� ��த்துவிட்டு வந்தால் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்று அமெரிக்கா விளக்கம் அளித்தது.  
 
ஆனால், தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஷாருக்கானிடம் அவ்வளவு நேரம் விசாரணை நடந்ததாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பிலும், 2008-ல் அகமதாபாத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பிலும் குற்றவாளியான இந்திய� ��் முஜாஹிதின் அமைப்பைச் சேர்ந்த ரியாஸ் பட்கல், நடிகர் ஷாருக்கானின் தீவிர ரசிகன் ஆவான்.
 
எனவே தனது பெயரை ரியாஸ் பட்கர் என்ற ஷாருக்கான் என்று வைத்துக் கொண்டுள்ளான்.  இவன் தவிர, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பலர் ஷாருக்கான் மீது காதல் கொண்டுள்ளனர். அவரது தீவிர ரசிகர்களாக மாறியுள்ளனர்.
 
இதன் காரணமாக தங்கள் பெயருடன் ஷாருக்கா ன் எனற பெயரையும் தீவிரவாதிகள் இணைத்துக் கொண்டுள்ளனர். அதை மோப்பம் பிடித்துள்ள உளவுப் பிரிவுகளும் சர்வதேச போலீசாரும் (இண்டர்போல்) தீவிரவாத அச்சுறுத்தல் நாடுகளை எச்சரித்துள்ளனர்.
 
சமீபத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் தேடப்பட்டு வரும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் (லஷ்கர்-இ-தொய்பாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவன்) ஷாருக்கான் என்ற பெ� �ரில் ஒரு பயணிபோல் விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பு இருப்பதாக இண்டர்போல் குறிப்பிட்டு இருந்தது.
 
இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சர்வதேச விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. எச்சரிக்கை நோட்டீஸ் அடிப்படையிலேயே நியூயார்க் விமான நிலையத்தில் ஷாருக்கானிடம் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்துள்ளது.






http://devadiyal.blogspot.com


comments | | Read More...

ஸ்டாலின் ஆதரவாளர்கள் - அழகிரி ஆதரவாளர்கள் : மதுரையில் பரபரப்பு

Penulis : karthik on Saturday, 14 April 2012 | 22:47

Saturday, 14 April 2012




மதுரையில் நகர் மற்றும் புறநகர் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது.  திமுகவின் பொருளாளர் மு.க. ஸ்டா� ��ின் தலைமையில்  இன்று ( 14.4.2012)  மாலை மற்றும் நாளையும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.


மதுரையில் முதன்முறையாக அழகிரி இல்லாமல் திமுக நேர்காணல் நடப்பது இதுவே முதல் முறை என்கிறது மதுரை திமுக வட்டாரம்.



இன்று காலையில் அழகிரி ஆதரவாளர்கள் மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள  தமிழ்நாடு ஓட்டலில் ஒன்று கூடி, இன்று ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நேர்காணல் கூட்டத்தையும், நாளை நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு  செய்துள்ளனர்.  இதையறிந்த ஸ்டாலின் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

இதையடுத்து மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதிமு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இளைஞரணி நேர்காணலுக்கு அழகிரி ஆதரவாளர்கள்  வரவில்லை என்றால் நான் பதவியை ராஜின� �மா செய்வேன் என்று அதிரடியாக கூறினார். 

இதன் பின்னர் அழகிரி ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் தளபதியை நேரிலும், தொலைபேசியிலும் தொடர்புகொண்டு,   ''அண்ணன்( அழகிரி ) இல்லாத இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம்.    அவர் அனுமதி இல்லாமல் நாங்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம்.   அவர் உத்தரவு போட்டால்தான் நாங்கள் பங்கேற்போம்'' என்று கூறியுள்ளனர்.


உடனே தளபதி,  '' நானும் அழகிரி ஆதரவாளர்தான்.   அப்படியிருந்தும் நான் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறேன் என்றால், அதுக்கு காரணம், இது கட்சி பொது நிகழ்ச்சி.    திமுக சார்பில் நடைபெறும் திமுக இளைஞரணி கூட்டத்தில் திமுகவினரின் கடமை.   கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு நாம் பங்கேற்க வேண்டும்'' என்று எவ்வளவோ கேட்டுப்பார்த்தும்ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தை புறக்கணிப்பது என்கிற முடிவில் உள்ளனர் அழகிரி ஆதரவாளர்கள்.


இதனால் மதுரை திமுகவில் பரபரப்பு நிலவுகிறது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger