News Update :
Powered by Blogger.

கனிமொழி தூதுவரிடம் அழகிரி போனில் பாடிய ஆவேச கீதம்!

Penulis : karthik on Monday, 9 January 2012 | 01:56

Monday, 9 January 2012



தி.மு.க.வுக்குள் தற்போது இருப்பது புயலுக்கு முந்திய அமைதி என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள். புயல் டில்லியில் மையம் கொண்டுள்ளது. அது எந்த நேரமும் தெற்கு நோக்கி நகர்ந்து வந்து, சென்னையில் கோபாலபுரத்தைத் தாக்கலாம். அப்போது 'சோ' வென கண்ணீர் மழை பொழியும்.

டில்லியில் மையம் கொண்டுள்ள புயல் கனிமொழி!

கனிமொழியின் சமீபத்திய சென்னை விஜயங்கள் அவரிடம் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவருடன் பேசியவர்கள் சொல்கிறார்கள். அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சென்னையில் கொண்டாடப்பட்ட போது, டில்லியில் இருந்து கிரீன் சிக்னல் கொடுத்ததே அவர்தான் என்றும் சொல்கிறார்கள்.

கட்சி ரீதியான பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்பது 1970-களில் இருந்தே தி.மு.க.-வில் அதிகாரத்தை கன்பர்ம் செய்யும் ஒரு சடங்கு. அண்ணாவுக்கு கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கருணாநிதிக்கும் எக்ஸ்டென்ட் பண்ணப்பட்டது. அதன்பின் ஸ்டாலினுக்கும் நீடிக்கப்பட்டது. விடுவாரா அஞ்சா நெஞ்சர்? அவரது ஆட்கள் மதுரையை தடல்புடல் படுத்தினார்கள்.

இப்போது கனிமொழி பிறந்த நாளுக்கு, பெரிய அளவில் கொண்டாட்டம் தொடங்கியிருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகள் சென்னையில் செய்யப்பட்டபோது, கனிமொழிக்கு தகவல் சொல்லப்பட்டது. அவருக்கு அதில் லேசான தயக்கம் இருந்தது. ஆனால், ராசாத்தி அம்மாளுக்கு ஆட்சேபணை ஏதும் இருக்கவில்லை. அதன்பின் கனிமொழியும் சம்மதிக்கவே ஏற்பாடுகள முழு வேகத்தில் நடந்தன. ராசாத்தி அம்மாள் நேரில் கலந்துகொண்டு மைக் பிடித்து பேசுவது என்ற யோசனை வந்தபோது, அதற்கு கனிமொழியின் கிரீன் சிக்னல் கிடைத்தது!

கோபாலபுரத்தில் இதையெல்லாம் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தடுக்க முடியாதபடி அவர்களது விஷயம் ஒன்று, வசமாக இவர்களிடம் மாட்டிக் கொண்டிருந்தது! அதைத்தான் ராசாத்தி அம்மாள் பிறந்தநாள் விழாவில் தனது பேச்சில் குறிப்பிட்டார். (விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)

இப்போது, இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் கட்சியில் கனிமொழியின் முக்கியத்துவம் உறுதி செய்யப்பட்டு விட்டது. 2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கு கோபாலபுரத்துக்கு 'நல்லபடியாக' முடியும்வரை ராசாத்தி அம்மாள்-கனிமொழி செய்யும் எந்தக் காரியத்தையும் அவர்கள் தடுக்கப் போவதில்லை என்பது இவர்களுக்கு நன்றாகவே புரிந்து விட்டது.

அதையடுத்து தற்போது சி.ஐ.டி. காலனியில் இருந்து அழுத்தம்மேல் அழுத்தமாக வரத் தொடங்கி விட்டது என்கிறார்கள் உள்வீட்டு விஷயம் அறிந்தவர்கள்.

ஸ்டாலினுக்கு கட்சியின் நெம்பர்-2 இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அழகிரி கட்சியின் தென்மண்டலப் பொறுப்பாளராகவும், மத்திய அமைச்சராகவும் உள்ளார். குறைந்தபட்சம் அழகிரியின் அளவுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்கிறது சி.ஐ.டி. காலனி பிரஷர்.

ஏற்கனவே எம்.பி.-யாக உள்ள கனிமொழிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வாங்கிக் கொடுங்கள். கட்சி மட்டத்தில் ஓய்வெடுக்கும் வயதில் உள்ள யாராவது ஒரு தலையை அகற்றிவிட்டு, அந்தப் பதவியை கனிமொழிக்கு கொடுங்கள் என்ற தடாலடி கோரிக்கை வந்து விழுந்திருக்கிறது என்கிறார் கட்சியின் சீனியர் எம்.பி. ஒருவர். இந்த விவகாரத்தில், ஸ்டாலினை விட, அழகிரிதான் அதிகம் அதிர்ந்து போயிருக்கிறார் என்றும் கூறுகிறார் அவர்.

சமீபத்தின் தம்மை போனில் தொடர்புகொண்ட தி.மு.க. எம்.பி. ஒருவரிடம் "ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது, ஜாமீனில் வெளியே வந்துள்ள கனிமொழிக்கு அமைச்சரவையில் இடம் கேட்பது எமக்கே அவமானமான விஷயமல்லவா? கேட்டாலும் அவர்கள் (காங்கிரஸ் மேலிடம்) கொடுக்கப் போவதில்லை. அதன்பின் நாம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு டில்லியில் அரசியல் செய்வது? சென்னையில் இருப்பவர்கள் சென்னையிலேயே இருந்து விடுவார்கள். டில்லியில் இருக்க வேண்டியவர்கள் நாமல்லவா?" என்று ஆவேசப் பட்டிருக்கிறார்.

"சரி. அமைச்சர் பதவி கேட்கிறோம். அவர்கள் தரமாட்டேன் என்று சொல்லி விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அடுத்து என்ன? மத்திய அரசுக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் வாங்குங்கள் என்று அவர்கள் (கனிமொழி-ராசாத்தி அம்மாள்) பிரஷர் கொடுப்பார்கள். ஆதரவை வாபஸ் வாங்கினால், அமைச்சரவையில் நாங்கள் இல்லை. ஒருவேளை ஆட்சியே கவிழ்ந்தால், மீண்டும் எம்.பி.யாக நீங்களும் வரமுடியாது, நானும் வரமுடியாது. ஊரில் இருந்து விவசாயம் செய்ய வேண்டியதுதான்" என்றும் பொரிந்தாராம் அவர்.

போனில் தொடர்பு கொண்ட எம்.பி. "ஆமால்ல.. நீங்க சொல்றது சரிதான்" என்று கம்மென்று போனை வைத்துவிட்டார்.

இதை எமக்கு கூறிய தி.மு.க. எம்.பி., "இந்த உரையாடலில் அழகிரிக்கு தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது தெரியுமா?" என்று கேட்டு கண்ணடித்தார்!

"என்னங்க அது?"

"அழகிரியை தொடர்பு கொண்ட எம்.பி.யே கனிமொழி தரப்பின் தூதுவராக அழகிரியுடன் பேச உத்தரவிடப்பட்ட ஆள்தான் என்பது அழகிரிக்கு தெரியாது. கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று அழகிரியை கன்வின்ஸ் பண்ணி, அவரது ஆதரவை பெறுவதற்காக இந்த எம்.பி.யை அழகிரியுடன் பேசுமாறு சொல்லி போன் பண்ண வைத்திருந்தார்கள். பாவம் அந்தாளு.. போனை எடுத்ததுமே அழகிரி பொரிந்து தள்ளிவிட்டார். இவர் "ஆமாங்க.. ரொம்ப சரிங்க.."  என்பதற்குமேல் எதுவும் பேச முடியாமல் போனை வைத்துவிட்டார்"

"அப்படியானால் இந்த எம்.பி.க்கு சி.ஐ.டி. காலனியில் செம டோஸ் விழுந்திருக்க வேண்டுமே" என்று நாம் கேட்டதற்கு, எம்முடன் பேசிய தி.மு.க. எம்.பி. பதில் சொல்லவில்லை.

அட, இதுதாங்க கட்சிக் கட்டுப்பாடு!


comments | | Read More...

இணையதள 'பேஸ்புக்' பழக்கம் மூலம் பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது

இணையதள 'பேஸ்புக்' மூலம் காதலிப்பதாக தொழில் அதிபருக்கு தகவல் அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்துவருகிறார். இணையதள பிரியரான முருகன், பேஸ்புக்கில் தன்னுடைய முழு விவரங்களையும், தொழில் பற்றியும் பதிவு செய்துள்ளார். மேலும் பேஸ்புக்கில் இவருக்கு ஏராளமான டாக்டர்கள் மற்றும் தொழில்அதிபர்கள் நண்பர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அபிநயா என்கிற அனுஷ்கா (வயது 23) பேஸ்புக்கில் முருகனை பற்றிய தகவல்களை அறிந்து இமெயில் மற்றும் செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும், பேஸ்புக்கில் நண்பராக அறிமுகப்படுத்திக்கொண்டார். அப்போது அபிநயா தன்னை சென்னையில் தனியார் மருத்துவ கல்லூரியில் படித்துவருவதாகவும், விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வருவதாகவும் கூறினார். மேலும் தனது தந்தை கரூர் பகுதியை சேர்ந்த பிரபல அரசியல்வாதி எனவும் தனக்கு ரூ.350 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் கூறியுள்ளார்.

முதலில் அபிநயா, தன்னை ஒரு நபர் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள இருப்பதாகவும் கூறி உள்ளார். இதனால் முருகன், அபிநயாவிற்கு அறிவுரைகள் கூறி அவரை சமாதானப்படுத்தினார். அதனைதொடர்ந்து முருகனும், அபிநயாவும் பேஸ்புக்கில் சாட் செய்தும், அவ்வப்போது செல்போனிலும் சகஜமாக பேசினர். அவர்களது பழக்கம் நாளுக்கு நாள் வளர்ந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் இருவருக்கு இடையே உள்ள பழக்கத்தை வெளி உலகிற்கு எடுத்துக்கூறி அசிங்கப்படுத்திவிடுவதாகவும், இல்லையென்றால் சொத்தில் பாதியை கொடுத்துவிட வேண்டும் என்றும் முருகனை, அபிநயா மிரட்ட தொடங்கினார்.

பேஸ்புக்கில் சாதாரணமாக பழகியது இப்படி வில்லத்தனமாகி விட்டதே என பதறிப்போன முருகன், அவரிடம் பின்பு தொடர்பை துண்டித்தார். இதற்கிடையில் அபிநயா, முருகனின் தொழில்நிறுவனங்களுக்கு நேரில் சென்று முருகனை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், தனக்கு மரியாதை தர வேண்டும் என்றும் அங்கு பணியில் இருப்பவர்களை மிரட்டி சென்று உள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தொடர்ந்து முருகனிடம் போனில் வற்புறுத்தினார்.

இதனால் பயந்துபோன முருகன் இது குறித்து கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பேஸ்புக் மூலம் முருகனிடம் பழக்கத்தை ஏற்படுத்திய அபிநயா, அவரை மட்டுமல்லாமல் மேலும் டாக்டர்கள், தொழில்அதிபர்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. அபிநயா தனது பேஸ்புக் அக்கவுண்டில் தான் பெரிய கோடீசுவரி என்றும் தனக்கு ரூ.350 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பலர் அவரிடம் ஆசையுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கடைசியில் பணத்தை இழந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அபிநயாவின் முகவரி போலியானது என்றும், அவர் மருத்துவகல்லூரி மாணவி இல்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அபிநயாவை பிடிக்க போலீசார் வியூகம் அமைத்தனர். அவர் எந்த ஊரில் தங்கி இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் முருகன் மற்றும் அவரது நண்பர்களை வைத்து அபிநயாவை செல்போனில் தொடர்பு கொண்டு நைசாக பேசி திருச்சிக்கு வரவழைத்தனர். அதன்படி, அபிநயா திருச்சி வந்தபோது அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

உடனடியாக அவரை திருச்சி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு இளங்கோவன் முன்னிலையில் ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் அபிநயா குறித்த விபரங்களை சேகரித்து, பேஸ்புக் மூலம் அவர் வேறுயாரிடமாவது இதுபோன்று பணம் கேட்டு மிரட்டி உள்ளாரா? என விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அபிநயாவை ஆஜர்படுத்துவதற்காக திருச்சி கோர்ட்டிற்கு நேற்று மதியம் போலீசார் அழைத்து வந்தனர். அப்போது கோர்ட்டு வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே, அவர் கோர்ட்டுக்குள் வர மறுத்து அழுது புரண்டு அடம்பிடித்தார். அப்போது அபிநயா நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது தந்தை கரூரில் பிரபல அரசியல்வாதி. எனது அம்மா தமிழ்ச்செல்வி இறந்துவிட்டார். தற்போது நான் பிரச்சினையில் சிக்கி உள்ளதால் எனது தந்தை என்னை அவரது மகள் இல்லை என கூறுகிறார். இணையதளம் மூலம் முருகன் எனக்கு பழக்கமானதைத் தொடர்ந்து 2 பேரும் நெருங்கி பழகி காதலித்தோம். நானும், அவரும் காதலித்து பழகியதற்கு செல்போன் பேச்சும், என்னுடைய இமெயிலில் உள்ள கடிதங்களும் ஆதாராங்களாக உள்ளன. அவரையும் போலீசார் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
comments | | Read More...

மாமியாரை பலாத்காரம் செய்து கொலை செய்த மருமகன் : ஊத்துமலை அருகே பரபரப்பு

வீரகேரளம்புதூர் :ஊத்துமலை அருகே மாமியாரை பலாத்காரம் செய்து கொலை செய்த மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.


ஊத்துமலை போலீஸ் சரகம் வெண்ணிலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஊரிமுத்தம்மாள் (51). கணவரை இழந்த இவருக்கு வள்ளிக்குமாரி (25) என்ற மகளும், முருகன் (18) என்ற மகனும் உள்ளனர். மற்றொரு மகள் மூளை வளர்ச்சி குன்றியவராக உள்ளார். முருகன் சென்னையில் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். வள்ளிக்குமாரிக்கும், அதே ஊரை சேர்ந்த வேல்மாணிக்கதேவர் மகன் சுப்பிரமணியத்திற்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஊரிமுத்தம்மாள் மகன், மருமகனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.


இந்நிலையில் ஊரிமுத்தம்மாள் நேற்று காலை ரெட்டியார்பட்டி அருகிலுள்ள வயலில் பிணமாக கிடந்தார். தலையில் தாக்கப்பட்டு ஆடைகள் கிழிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே மருமகன் சுப்பிரமணியனின் சட்டை மற்றும் சைக்கிள் கிடந்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்தவுடன் சங்கரன்கோவில் டிஎஸ்பி மதிவாணன், ஊத்துமலை இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ்பீட்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.


விசாரணையில், முருகன் மாமியாருடன் வசித்து வந்தபோதும், வேலை எதற்கும் செல்லாமல் குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்தாராம். சொத்தை தன் பெயரில் எழுதி வைக்கும்படியும் தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில் நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயலுக்கு செல்லும் ஊரிமுத்தம்மாளுடன் துணைக்கு சுப்பிரமணியனும் செல்வாராம். இதுபோன்று நேற்றிரவும் சென்றுள்ளார். காலையில் இருவரும் வீடு திரும்பவில்லை.


சுப்பிரமணியன் போதையில் சொந்த மாமியாரையே பலாத்காரம் செய்து தலையில் மம்பட்டி கணையால் தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger