News Update :
Powered by Blogger.
Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

இளவரசன் மரணம் திவ்யாவை மீட்க கோரி கொடுத்த மனு தள்ளுபடி

Penulis : Tamil on Friday, 26 July 2013 | 03:57

Friday, 26 July 2013

தர்மபுரி இளவரசன் – திவ்யா காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் கடந்த நவம்பர் 7–ந் தேதி கலவரம் நடந்தது. இதில் பல வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் பலர் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே திவ்யா தாயார் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து திவ்யா கடத்தப்பட்டிருப்பதாகவும் அவரை மீட்டு தர வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் சுந்தரேஸ் முன்பு கடந்த 3–ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் ஆஜரான திவ்யா தனது தாயாருடன் செல்வதாக கூறினார். இந்த நிலையில் மறுநாள் இளவரசன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தேன்மொழியின் வக்கீல் ரூபட்பர்னபாஸ் ஆஜராகி, இளவரசன் இறந்து விட்டதால் தற்போது திவ்யா தயாருடன் வசித்து வருகிறார். எனவே, நாங்கள் தொடர்ந்திருந்த ஆட்கொணர்வு மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்றார்.
அப்போது இளவரசன் வக்கீல் ரஜினிகாந்த் கூறுகையில், இளவரசன் மரணம் உள்பட பல்வேறு சம்பவங்கள் நடந்து விட்டதால் இவற்றையும் கோர்ட்டில் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
இரு தரப்பு கருத்துக்களை கேட்ட நீதிபதிகள் திவ்யாவை மீட்க கோரி தேன்மொழி தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.
comments | | Read More...

இளவரசன் சாவு தற்கொலை: டெல்லி டாக்டர்கள் குழு உறுதிப்படுத்தியது

Penulis : Tamil on Wednesday, 17 July 2013 | 23:06

Wednesday, 17 July 2013

கருகிபோன இளவரசன் திவ்யா காதல்!

இளவரசன் கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? உண்மையில் நடந்தது என்ன? ஒட்டு மொத்த தமிழகமும் இந்த கேள்விகளுக்கு விடை தேடியது. பொதுவாக ஒரு தற்கொலை என்றால் இ.பி.கோ. 174 பிரிவில் வழக்கு பதிவு செய்து அனாயசமாக கையாளும் போலீசார் இந்த வழக்கை அவ்வளவு எளிதாக கையாள முடியவில்லை. இடையில் புகுந்த சாதியும், சந்தேகமும் நீதி தேவன் கோவிலில் மண்டியிட்டது.
comments | | Read More...

35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை

Penulis : Tamil on Tuesday, 9 July 2013 | 02:21

Tuesday, 9 July 2013

தட்டார்மடம் அருகே திருமணமான 35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்தாக நாடகமாடியது அம்பலமானது.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
கட்டிட காண்டிராக்டர்
உடன்குடி தேரியூரைச் சேர்ந்தவர் ராகவன். இவர் அங்குள்ள அய்யா வழி கோவிலில் தர்மகர்த்தாவாக உள்ளார். இவருக்கு சுதாகர் (வயது 33), பிரபாகரன் ஆகிய 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். மூத்த மகன் சுதாகர் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கும், உடன்குடி அருகே உள்ள தண்டுபத்து சாமியார்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிவமுருகன் மகள் சூர்யா (30) என்பவருக்கும் கடந்த 35 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

comments | | Read More...

இளவரசன் திவ்யாவுக்கு எழுதிய உருக்கமான கடிதம்

Penulis : Tamil on Monday, 8 July 2013 | 02:47

Monday, 8 July 2013

தர்மபுரியில் ரெயில்வே தண்டவாளம் அருகே கடந்த 4–ந் தேதி காதல் கலப்பு திருமணம் செய்த கல்லூரி மாணவர் இளவரசன் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டார் என்று அவரது தந்தை இளங்கோ, தாயார் கிருஷ்ணவேணி, மற்றும் அவரது வக்கீல் ரஜினிகாந்த், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தினர் ஆகியோர் கூறி வந்தனர். அவரது மரணம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்த சூழ்நிலையில் இந்த வழக்கில் நேற்று இரவு திடீர் திருப்பம் ஏற்பட்டது.
அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இளவரசன் இறப்பதற்கு முன்பு எழுதிய 4 பக்க கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை அவரது உறவினர் ஒருவரிடம் இருந்து போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தை இளவரசன் தனது பெற்றோருக்கும், காதல் மனைவி திவ்யாவுக்கும் எழுதி இருந்தார். அதில் இரண்டு பகுதியாக கடிதம் எழுதப்பட்டு இருந்தது. ஒரு பகுதி திவ்யாவுக்கும், இன்னொரு பகுதி தந்தை இளங்கோவுக்கும் எழுதப்பட்டு இருந்தது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger