News Update :
Home » » இன்று வாக்கு எண்ணிக்கை: குடியரசுத் தலைவராக தேர்வாகிறார் பிரணாப் முகர்ஜி

இன்று வாக்கு எண்ணிக்கை: குடியரசுத் தலைவராக தேர்வாகிறார் பிரணாப் முகர்ஜி

Penulis : karthik on Saturday, 21 July 2012 | 21:36





நாட்டின் 14-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று எண்ணப்படுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவார் � �ன்று எதிர்பார்க்கப்படுகிறது.
14-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.ஏ.சங்மாவும் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. நாட்டின் எம்.பி, எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். மொத்தம் 72 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
அனைத்து மாநில வாக்குப் பெட்டிகளும் சீல் வைக்கப்பட்டு விமானங்கள் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. நாடாளுமன்ற அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அ� ��ை அனைத்தும் இன்று திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அனேகமாக பிற்பகலுக்குள் முடிவு அறிவிக்கப்பட்டுவிடும். பெரும்பான்மையான கட்சிகள் பிரணாப் முகர்ஜிக்கே ஆதரவாக இருப்பதால் அவரே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலின் பதவிக் காலம் வரும் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசுத் தலைவர் 25-ந் தேதி பதவியேற்க உள்ளார். புதிய குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவியேற்பு செய்து வைப்பார். புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி நாடாளு� ��ன்ற வளாகத்தில் நடைபெற்றது.








Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger