ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இப்பொழுது குடைச்சல் கொடுக்கத் தொடங்கியிருக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார� �� சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சி பார்முலா ஒன்றை உருவாக்கியுள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் நம்பர் 2- என்ற இடத்தில் இருந்தவர் பிரணாப் முகர்ஜி. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நம்பர் 3- ஆக இருந்த சரத்பவார் தமக்கு நம்பர் 2- தகுதி கிடைக்கும் என கனவு கண்டு கொண்டிருந்த� �ர். ஆனால் காங்கிரஸோ காலை வாரிவிட்டது. 4-வது இடத்தில் இருந்த ஏ.கே. அந்தோணிக்கு நம்பர் 2 இடம் கொடுக்க ஆத்திரப்பட்டார் சரத்பவார். இதன் உச்சமாக சரத்பவாரும் அவரது கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பிரபுல் பட்டேலும் நேற்று மன்மோகன்சிங்கிடம் தங்களது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர்.
இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சரத்பவார் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது சரத்பவாரை சமாதானப்படுத்தும் விதமாக சோனியா காந்தி பார்முலா ஒன்றைக் கூறியுள்ளார்.
அதாவது பிரதமர் மன்மோகன்சிங் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அமைச்சரவைக் குழுதான் அரசாங்கத்தை நடத்தும். தற்போதைய நிலையில் நம்பர் 2-ஆக இருக்கும் ஏ.கே. அந்தோணி, சரத் பவார் மற்றும் மக்களவை தலைவர் ஆகியோர் அடங்கிய குழு அரசாங்கத்தை நடத்தட்டும் என்று சோனியா காந்தி கூறியிருக்கிறார்.
Post a Comment