இந்தி திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார் நம்ம ஊர் பிரபுதேவா.
விஜய் நடித்த 'போக்கிரி' படத்தினை இயக்கிய பிரபுதேவா அப்படத்தினை 'WANTED' என்ற பெயரில் சல்மான்கான் வைத்து இயக்கினார். படம் அதிரிபுதிரி ஹிட்.
அதனைத் தொடர்ந்து இந்தியில் பல்வேறு வாய்ப்புகள் பிரபுதேவா வீட்டி கதவை தட்டோ தட்டென்று தட்டின. அடுத்த படமும் தமிழில் வசூலை வாரி இறைத்த 'சிறுத்தை' படத்தின் இந்தி ரீமேக்கான் 'ROWDY RATHORE' படத்தினை அக்ஷய்குமாரை வைத்து இயக்கினார்.
அப்படமும் 100 கோடி வசூலை கடக்க, தற்போது மும்பை திரையுலகம் பிரபுதேவா வசமாகி இருக்கிறது. இந்தியின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் பிரபுதேவாவைத் தொடர்பு கொண்டு இரு� �்கின்றன.
தமிழில் 'போக்கிரி' படத்தினைத் தொடர்ந்து 'எங்கேயும் காதல்', 'வெடி' படங்கள் வரவேற்பைப் பெறவில்லை. இந்தியில் தொடர்ந்து தனது படங்கள் வசூல் மழையில் நனைவதால், தமிழில் படம் இயக்க இன்னும் பல மாதமாகும் என்கின்றனர். மேலும், அங்கு இவரது சம்பளம் இவரது பாக்கெட்டையும், பாராட்டுகள் இவர� �ு மனதையும் நிரப்பி வழிகிறதாம்.
தமிழில் படங்களை இயக்கிய பிரபுதேவா, தான் இயக்குனராக அறிமுகமான Nuvvostanante Nenoddantana தெலுங ்கு படத்தினை இந்தியில் ரீமேக் செய்கிறார். இப்படம் தான் தமிழில் 'உனக்கும் எனக்கும்' என்ற பெயரில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்தது.
பிரபுதேவா இயக்கும் இந்தி படத்தில் தயாரிப்பாளர் குமார் தாருணீயின் மகன் க்ரிஷ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'ஜெயம்' ராஜா ரீமேக் படங்களாலேயே தனக்கென இங்கு ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டது போல, இந்தியில் பிரபுதேவா மார்கெட் பிடித்துவிட்டார்.
Post a Comment