ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் ரிலீஸுக்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவு ப� �றப்பித்துள்ள நிலையில் மற்றொரு பிரச்சினையில் இருக்கிறது துப்பாக்கி யூனிட். கலைப்புலி தானு தயாரித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்திற்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜெமினி சர்கியூட்ஸ் சொந்தம் கொண்டாடுவது தான் அந்த பிரச்சினையாம்.
துப்பாக்கி படப்பிடிப்பு துவங்கிய போது ஜெமினி நிறுவனம் கொடுத்த காசோலைக்கான பணம் அவர்களது கணக்கில் இல்லாததால் கலைப்புலி தானு தான் பணம் கொடுத்து படப்பிடிப்பை துவங்கினாராம். இப்போது ஜெமினி நிறுவனம் தயாரிப்பு பொறுப்பை கேட்பதால் கலைப்புலி தானு "இதுவரை துப்பாக்கி படத்திற்காக செலவு செய்யப்பட்ட பணத்தை கொடுத்துவிட்டு படத்தின் உரிமையை பெற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டாராம்.
ஆனால் துப்பாக்கி படத்திற்கு இதுவரை செய்யப்பட்ட செலவு ஜெமினி நிறுவனம் போட்ட கணக்கை தாண்டி போய் நிற்கிறதாம். ஏற்கனவே டைட்டில் பிரச்சினையில் இருக்கும் துப்பாக்கி படத்திற்கு பிரச்சினை இரண்டாவது ரவுண்டு வருகிறது.
இயக்குனர் முருகதாஸ் டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார். சூர்யாவின் ரசிகர்களில் ஒருவர் "சூர்யா தான் மாஸ். இந்த வருடம் சினிமாவின� �� ஆட்சியில் 'மாற்றான்' ஆட்சி தான் என்று சொல்ல. அதற்கு முருகதாஸ் "பாப்பா கொஞ்சம் தள்ளிப் போய் விள� ��யாடு" என்று கூறியுள்ளார்.
Post a Comment