அஜீத், பார்வதி ஓமனக்� �ுட்டன் நடிக்கும் பில்லா 2 படம் நாளை வெளிவரவிருக்கிறது. இப்படம் சென்னை மாயாஜாலில் மட்டும் முதல் நாளிலேயே 76 காட்சிகள் திரையிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்ய� �்பட்டு, 'பில்லா 2' படம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இவ்வகையில் முன்னதாக அஜீத்தின் 'மங்காத்தா' படம் 75 காட்சிகள் திரையிடப்பட்டதே சாதனையாக இருந்து வந்தது. மேலும் 'பில்லா 2' படத்துக்கான முன்பதிவு துவங்கிய முதல் நாளில் மதியத்தி� �்கு முன்னதாகவே 15,000 டிக்கெட்டுகள் ஆன்-லைனில் புக் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கிங் ஆப் ஓப்பனிங் என்ற பெயருக்கு தான் பொருத்தமானவர் என்பதை அஜீத் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.
தேவி, சங்கம், அபிராமி, ஏ.ஜி.எஸ், பேம் மற்றும் ஐநாக்ஸ் உள்ளிட்ட மற்ற தியேட்டர்களிலும் இப்படத்தின் டிக்கெட்டுகளுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. இதனால் 'பில்லா' 2 படம் வசூலில் பல புதிய சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment