பில்லா-ll இன்னும் சில தினங்களி� �் திரைக்கு வரவிருக்கிறது சக்ரி டொலட்டி இயக்கத்தில் அஜீத்குமார் நடித்துள்ள பில்லா-ll படத்தில் அஜீத் இலங்கை அகதியாக நடித்திருக்கும் காட்சிகள் டிரெய்லரில் வெளியிடப்பட்டதிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
1980-களில், உச்சத்தில் இருந்த ஹாலிவுட் ஹீரோ அல்பச்சுனோவின் தீவிர ரசிகர் அஜீத். அஜித்தின் ஆஸ்தான ஹீரோ அல்பச்சுனோ நடித்து 1983ம் வருடத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த ஸகார்பேஸ் படத்தின் கதையை தழுவிதான் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
அதில் ஹீரோ அல்பச்சுனோ கியூபா நாட்டிலிருந்து அமெரிக்காவில் அகதியாக தஞ்சம் புகுந்து, அங்கே மியாமி பீச் பகுதிகளில் போதை பொருள் கடத்தல் மன்னனாக வளர்ந்து ஆளாகி, அதில் கிடைக்கும் பணத்தில் கியூபா புரட்சிப் போருக்கு உதவிடும் கேரக்டரில் நடித்திருப்பார்.
அதேபோல் பில்லா-ll வில் 'தல' அஜித் இலங்கை அகதியாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு இண்டர்நேஷனல் அள வில் ஈழப்புரட்சிக்கு உதவுவதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறதாம்!
Post a Comment