News Update :
Home » » பெண்கள், சிறுமிகளை கடத்துவதில் தமிழ்நாடு 'நம்பர் ஒன்'!

பெண்கள், சிறுமிகளை கடத்துவதில் தமிழ்நாடு 'நம்பர் ஒன்'!

Penulis : karthik on Thursday 12 July 2012 | 02:43





பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தலில் தென்னகத்திலேயே தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவணப் ப� �ிவகம் தெரிவித்துள்ளது.

2011ம் ஆண்டு பெண்கள் அதிக அளவில் கடத்தப்பட்டது தமிழகத்தில்தானாம். நான்கு தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் பெண்கள் கடத்தல் நடந்துள்ளதாம்.

தமிழகத்தில் சிறுமிகள் உள்பட பெண்கள் கடத்தல் சம்பவங்கள் 1743 நடந்துள்ளது. ஆந்திராவில் இது 1612 ஆகவும், கர்நாடகத்தில் 1395 ஆகவும், கேரளாவில் 299 ஆகவும் இருந்தது.

தேசிய அளவில் உ.பிக்குதான் கடத்தலில் முதலிடம் கிடைத்துள்ளது. அங்கு மொத்தம் 7525 வழக்குகள் இதுதொடர்பாக பதிவாகியுள்ளன. இரண்டாவது இடத்தில் மேற்கு வங்கமும், 3வது இடத்தில் பீ� �ாரும் உள்ளன.

தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 187 கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. சேலத்தில் 108, கடலூரில் 100 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தலைநகர் சென்னையில் 41 வழக்குகள் பத ிவாகியுள்ளன. கோவையில் இது 39ஆக இருந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெண்கள், சிறுமிகள் கடத்தல் தவிர மற்ற கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை 241 ஆக இருந்தது. இதையும் சேர்த்தால் மொத்தம் 1984 கடத்தல் சம்பவங்கள் கடந்த ஆண்டு தமிழகத்தில் நடந்துள்ளன.

குடும்பப் பிரச்சினை, கல்யாணம் செய்து தர மறுப்பது, பணம் கேட்டு மிரட்ட என்று பல� �வேறு காரணங்களுக்காக கடத்தல் சம்பவங்கள் பொதுவாக நடக்கின்றன. கள்ளக்காதலில் நடைபெறும் கடத்தல்களும் கணிசமாக உள்ளதாக தேசிய குற்ற ஆவணப் பதிவகம் கூறுகிறது.







Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger