அஜ்மல், ராதிகா ஆப்தே � ��ோடியாக நடிக்கும் படம் வெற்றிச் செல்வன், ருத்ரன் இயக்குகிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு ராயப் பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் தியேட்டரில் நடந்தது. இதில் பங்கேற்று நடித்த ராதிகா ஆப்தே நிருபர்களிடம் கூறியதாவது:-
ரத்த சரித்திரம், டோனி படங்களில் நடித்துள்ளேன். வெற்றிச் செல்வன் தமிழில் எனக்கு மூன்றாவது படம். இதில் வக்கீல் கேரக்டரில் வருகிறேன். தொழிலிலும் வைராக்கியமும் மற்றவர்க� �ிடம் மென்மையாக நடக்கும் குணத்துடனும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறேன்.
நல்ல கதையம்சம் உள்ள படம். சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயம் படத்தில் உள்ளது. லண்டனை சேர்ந்த இசை அமைப்பாளர் பெனட்டிக் டெய்வருடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன்.
தமிழில் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன். எனது முந்தைய படங்களை போல் அல்லாமல் வெற்றிச் செல்வன் முழு கமர்சியல் படமாக வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் அஜ்மல் கூறும் போது வெற்றிச் செல்வன் படம் சமூக அக்கறையுடனான கதை கருவில் தயாராகியுள்ள கமர்ஷியல் படம். கதை பிடித்ததால் நடித்தேன். பின்னணி பாடகர் மனோவும் என்னுடன் நடித்துள்ளார். ஆகஸ்டில் படம் ரிலீசாகிறது. கோ படம் போன்று வித்தியாசமான கேரக்டர் அமைந்தால் வில்லனாகவும் நடிப்பேன் என்றார்.
home
Home
Post a Comment