News Update :
Home » » ரூ.6 1/2 கோடி நஷ்டஈடு: டோனிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ரூ.6 1/2 கோடி நஷ்டஈடு: டோனிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Penulis : karthik on Thursday 12 July 2012 | 04:18





இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி. விளையாட்டு மூலம் புகழை பெற்ற அவர் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து வருகிறார். டோனி 2006-ம் ஆண்டு கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் நிறுவனத்தில் (கே.எஸ்.டி.எல்) ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். 

டோனியை அந்த நிறுவனம் 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே டோனி அந்த விளம்பர நிறுவனத்தில் இருந்து பாதியில் விலகி கொண்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து டோனி மீது கே.எஸ்.டி.எல். நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. விளம்பர ஒப்பந்த விதி முறைகளை டோனி மீறி வி� ��்டதாகவும், இதனால் அவர் ரூ.6 1/2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குருராஜன் இந்த மனுவை விசாரித்து தள்ளுபடி செய்தார். ரூ.6 1/2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கோர்ட்டு நிராகரித்தது.





















Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger