பில்லா-2 படம் வருகிற 13-ந்தேதி ரிலீசாகிறது. தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு நாளை துவங்குகிறது. படம் வெற்றிபெற அஜீத் திர ுப்பதி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். ரஜினி தனது படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அவரை பின்பற்றி அஜீத்தும் திருப்பதிக்கு சென்றுள்ளார்.
சாதாரண இளைஞர் பெரிய தாதாவாக எப்படி மாறுகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை. வெளிநாநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். பார்வதி ஓமனகுட்டன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்க� ��் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
Post a Comment