News Update :
Home » » எந்திரனுக்கு அடுத்து பில்லா-2!

எந்திரனுக்கு அடுத்து பில்லா-2!

Penulis : karthik on Tuesday, 10 July 2012 | 02:16





அஜித்குமார் நடித்துள்ள பில்லா-2, 2012-ஆம் ஆண்டில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற படம்.  இண்டர்னெட்டில் பில்லா-2 படத்தின் விளம்பரங்கள் இல்லாத இடமே இல்லை. பில்லா-2 படத்தின் இரண்டாவது டிரெய்லரில் வரும் வசனங்கள் தான் இளைஞர்களின் பஞ்ச் டையலாக்.

ஆக்‌ஷனும், ஆக்ரோஷமும் நிறைந்த சூடான டிரெய்லரை பார்த்த ரசிகர்களை குளிர்விக்கும் விதத்தில், பில்லா-2 படத்தின் காலண்டருக்காக எடுத்த நடிகைகளின் ஹாட்டான ஃபோட்டோஷூட் வீடியோவை  வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துவிட்டார்கள் படக்குழுவினர்.

     
                                     
சமீபத்தில் பில்லா-2 மொபைல் வீடியோகேம் வெளியிட்டார் அந்த படத்தின் ஒரு ஹீரோயின் ப்ரூனா அப்துல்லா. பில்லா-2 படத்தின் பாடல்களின் முன்னோட்டத்தையும் ஒவ்வொன்றாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் படக்குழுவினர், அம ெரிக்காவிலும் பில்லா-2 படத்தின் புரமோஷன்களை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் பில்லா-2 ஜூலை 13-ஆம் தேதியன்று 59 ஸ்கிரீன்களில் திரையிடப்படுகிறது. அமெரிக்காவின் 34 ஸ்கிரீன்களில் திரையிடப்படுகிறது பில்லா-2. ரஜினி நடித்த எந்திரன் படத்திற்கு அடுத்து உலகம் முழுவதும் அதிக ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்யப்படும் படம் பில்லா-2 என்பது கு� �ிப்பிடத்தக்கது.








Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger