2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு பற்றி பி.சி.சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழுவும் விசாரித்து வருகிறது. இந்தகுழு விசாரணை நடத்த இருப்பவர்களின் பட்டியலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் ராணுவ மந்தி ரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்று இருந்தன.
ஆனால் அவர்களை விசாரணைக்கு அழைப்பது இல்லை என்று கூட்டுக்குழு முடிவு செய்து உள்ளது. குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆ� ��ியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்ததாகவும், ஆனால் அவர்கள் உடல்நலம் குன்றி இருப்பதால் அவர்கள் இருவரையும் விசாரணைக்கு அழைக்க மாட்டோம் என்றும் பி.சி.சாக்கோ தெரிவித்தார்.
Post a Comment