துப்பாக்கி படத்தினை முடித்து விட்டு,அடுத்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.
இக்கேள்விக்கு கெளதம் வாசுதேவ் மேனன் என்ற பரவலாக முன்னர் செய்திகள் வந்தாலும், விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை கூறப்படாமல் இருந்தது.
இந்நிலையில், ஒரு புதிய செய்தி கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. ராஜேஷ் இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் விஜய்.
சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் வெற்றி கொடுத ்து, தன்னுடைய கலா கலா காமெடிக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் ராஜேஷ் இயக்கத்தில், முழுநீள நகைச்சுவை படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறாராம் விஜய்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்திற்கான தேதிகள் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார். ராஜேஷ் இயக்கத்தில் வழக்கம்போல் இடம்பெறும் சந்தானமும் இணைவார் என்பதால், இந்த மூவர் � ��ூட்டணியின் படம் கண்டிப்பாக ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்..
முன்னணி இயக்குனர்களான ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், விஜய், ராஜேஷ் என விஜய் ஒப்பந்தமாகி இருப்பது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் த்ள்ளி இருக்கிறது.
Post a Comment