News Update :
Home » » பாதுகாப்பாளர்கள் 2 பேர் சுட்டுக்கொலை அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை: கலெக்டர் அலெக்ஸ் பேட்டி

பாதுகாப்பாளர்கள் 2 பேர் சுட்டுக்கொலை அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை: கலெக்டர் அலெக்ஸ் பேட்டி

Penulis : karthik on Sunday 6 May 2012 | 01:06




சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டராக பணி புரிந்து வந்த அலெக்ஸ் பால்மேனன் கடந்த மாதம் 21-ந் தேதி, மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். அப்போது கலெக்டரை காப்பாற்ற முயன்ற அ� ��ரது பாதுகாவலர்கள் இருவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றனர். 13 நாள் பிணைக் கைதியாக இருந்த அலெக்ஸ் பால்மேனன், மாவோயிஸ்டுகளின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக சத்தீஸ்வர் அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டு, வீடு திரும்பினார். 

மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்த அனுபவத்தை அலெக்ஸ் பால்மேனன், இணைய தளத் தில் `பேஸ் புக்'கில் எழுதி இருப்பதாவது:- 

சுக்மா மாவட்டத்தில் மஞ்சிபாரா என்ற இடத்தில் சாதாரண ஏழை பழங்குடியின மக்கள் என்னை சூழ்ந்து நிற்க, திடீரென ஒரு கும்பல் என்னை கடத்த முயன்றது. அவர்கள் மாவோயிஸ்டுகள் என்பதை பின்புதான் தெரிந்து கொண்டேன். என்னை அவர்களிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் எனது பாதுகாவலர்கள் ஈடுபட்டனர். 

பாதுகாவலர்கள் இருவரையும் மாவோயிஸ்டுகள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர். இதுபோன்ற மோசமான ஆள் கடத்தல் நிகழும் என்று நான் கற்பனை கூட செய்து பார்த்தது கிடையாது. எனது பாதுகாவலர்கள் அம்ஜத், கிஸுன் ஆகியோர் என் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் மனதை விட்டு அகல வில்லை. அது ஒரு வலிகள் நிறைந்த நினைவுகள் ஆகும். 

அந்த நினைவுகள் என்னை தூங்க விடாமல் செய்கின்றன. இயல்பு நிலைக்கு திரும்பிய உடன் அந்த பாதுகாவலர்களின் குடும்பத்துக்கு என்ன செய்ய முடியும்ப என யோசித்து, அதை செய்து கொடுக்க முயற்சி எடுப்பேன். 

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.








Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger