ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 174 ரன்களை சேஸ் செய்து வந்த மும்பை இந்தியன்ஸ் துவக்க வீரர் சச்சின், ரோஹித் சர்மா ஜோடியின் சிறப்பான ஆட்டம் மூலம் வெற்றிப் பாதையில் சென்றது. அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததாலும், கடைசியில் ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெ� �்றிப் பெற்றது.
ஐபிஎல் 5 தொடரில் இன்று மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் துவக்க வீரர் முரளி விஜய்யின் மூலம் அதிரடி துவக்கத்தை பெற்றது.
வழக்கமாக வானவேடிக்கை காட்டும் துவக்க வீரர் டு பிளசிஸ் இன்று 9 ரன்களில் எதிர்பாராத வகையில் ரன் அவுட்டானார். துவக்கம் முதலே அதிரடியாக ஆடி முரளி விஜய், 4வது ஓவரில் 3 சிக்ஸ்< /span>, 1 பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
அதிரடியாக ரன்களை எடுத்து வந்த முரளிவிஜய் அரைசதத்தை நெருங்கிய நிலையில், ஆர்.பி.சிங்கின் பந்தில் போல்டானார். 29 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 41 ரன்களை எடுத்தார் முரளிவிஜய்.
அதன்பிறகு துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, பிராவோ ஜோடி அணியின் ஸ்கோரை பொறுமையாக உயர்த்தியது. அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தி வந்த சுரேஷ் ரெய்னா 21 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 36 ரன்களை எடுத்து ஆர்.பி.சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பொறுப்பாக ஆடி வந்த பிராவோ உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டோணி அதிரடியை தொடர்ந்தார். ஆனால் 1 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 40 ரன்களை குவித்த பிராவோ போல்டானார். அடுத்த ஓவரிலேயே க� ��ப்டன் டோணியும் பவுண்டரி லைனில் கேட்சாகி ஆட்டமிழந்தார். 15 பந்துகளில் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 25 ரன்களை சேர்த்தார் டோணி.
அடுத்து வந்த அல்பி மார்கல்(3), ஜடேஜா(9), அஸ்வின்(0) ஆகியோர் வரிசையாக அவுட்டாகினர். � �றுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்களை இழந்து 173 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பில் மலிங்கா, ஆர்.பி.சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
174 ரன்களை எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் துவக்கத்திலேயே பிராங்க்ளினின்(1) விக்கெட்டை இழந்தது. அதன்பிறகு ஜோடி சேர்ந்த சச்சின், ர ோஹித் சர்மா அணியின் ஸ்கோரை பொறுப்பாக உயர்த்தினர்.
துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய சச்சின் 44 பந்துகளில் 1 சிக்ஸ், 11 பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார். சச்சின் 74 ரன்கள் எடுத்த நிலையில், டு பிளசிஸிடம் கேட்சாகி வெளியேறினார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் அவுட்டானார். அதே ஓவரில் ராயுடு டக் அவுட்டானார்.
ரோஹித் சர்மா 46 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரிகள் அடித்து 60 ரன்களை குவித்த நிலையில் ஜடேஜாவின் பந்தில் போல்டானார். அதன்பிறகு வந்த ராபின் பீட்டர்சன்(0), ஹர்பஜன் சிங்(0), மலிங்கா(0) ஆகியோர் வரிசையாக அவுட்டாகினர்.
மும்பை இந்தியன்ஸின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களமிறங்கிய ஸ்மித் அதிரடியாக 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஸ்மித் 9 பந்துகளில் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 24 ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி வெற்றிப் பெற்றது.
Post a Comment