சூர்யா - காஜர் அகர்வால் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் மாற்றான். இப்படம் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்� ��ைகளின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் ரஷியாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. கோடையில் ரிலீசாகியிருக்க வேண்டிய இப்படம் சினிமா தொழிலாளர்களின் பிரச்சினை காரணமாக தள்ளிப் போய் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜோத்பூர் பாலைவனப்பகுதியில் சுமார் 500 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் சுவாரஸ்யமான, பிரம� ��மாண்டமான காட்சிகளும் இப்படத்தில் உள்ளது.
இன்னும் சில தினங்களில் இப்படத்தை முடித்து, சீக்கிரமாக வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இப்படத்தில் விவேக், ஈஷா ஷர்வாணி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
Post a Comment